virat kohli - maxwell web
T20

”RCB-ல் எனது பயணம் முடிந்துவிட்டதுஎன கூற மாட்டேன்”- தக்கவைக்கப்படாதது குறித்து மேக்ஸ்வெல் ஓபன் டாக்!

ஆர்சிபி அணியில் தக்கவைக்கப்படாதது குறித்து பேசியிருக்கும் க்ளென் மேக்ஸ்வெல், RCB அணியில் மீண்டும் விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

Rishan Vengai

2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி, விராட் கோலி (ரூ.21 கோடி), ரஜத் பட்டிதார் (11 கோடி) மற்றும் யஷ் தயாள் (ரூ.5 கோடி) மூன்று பேரை ரூ.37 கோடிகளை பயன்படுத்தி தக்கவைத்துள்ளது. க்ளென் மேக்ஸ்வெல், ஃபேஃப் டூபிளசி முதலிய ஸ்டார் வீரர்கள் பலரும் வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில், ஆர்சிபி அணியிடம் மீதம் 3 RTM ஆப்சனும், பர்ஸ் தொகையாக ரூ.83 கோடியும் மீதமுள்ளது.

17 ஐபிஎல் சீசன்கள் முடிந்திருக்கும் நிலையில் பலமுறை பிளே ஆஃப் மற்றும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கும் ஆர்சிபி அணி ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை. அதனால் மீண்டும் வலுவான அணியை கட்டமைக்கும் விதமாக வீரர்களை மட்டுமில்லாமல் ஊழியர்களை கூட ஆர்சிபி நிர்வாகம் வெளியேற்றியுள்ளது.

kohli - maxwell

இந்நிலையில் 2021 முதல் ஆர்சிபி அணியில் ஒரு அங்கமாக இருந்த க்ளென் மேக்ஸ்வெல் அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், Retention அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு ஆர்சி நிர்வாகம் தன்னுடன் உரையாடியது குறித்து மேக்ஸ்வெல் பாசிட்டிவாக பேசியுள்ளார்.

ஆர்சிபி அணியில் மீண்டும் விளையாட விரும்புகிறேன்..

கிறிக்இன்ஃபோ உடனான உரையாடல் நிகழ்ச்சியில் பேசியிருக்கும் மேக்ஸ்வெல், "மோ போபாட் மற்றும் ஆண்டி ஃப்ளவர் ஆகியோரிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. நாங்கள் ஷூம் உரையாடலில் அமர்ந்தோம், அவர்கள் நான் தக்கவைக்கப்படவில்லை என்ற முடிவு குறித்து எனக்கு விளக்கினர். அது உண்மையில் ஒரு அழகான வெளியேறும் சந்திப்பாக இருந்தது, நாங்கள் சுமார் அரை மணி நேரம் விளையாட்டைப் பற்றி பேசி முடித்தோம், அவர்களின் வியூகம் மற்றும் அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள், எப்படி முன்னோக்கிச் செல்லவிருக்கிறார்கள் என்பது குறித்து பேசினர். அவர்களின் இந்த அணுகுமுறையால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்” என்று பேசியுள்ளார்.

மேக்ஸ்வெல்

மேலும் ஆர்சிபி அணியில் விளையாடுவது குறித்து பேசிய அவர், “அவர்கள் வெளிப்படையாக தங்கள் ஊழியர்களில் சிலரையும் மாற்றுகிறார்கள். எனவே அவர்கள் வீரர்களுடன் பேசத் தொடங்குவதற்கு முன்பு அவர்களின் செயல்முறையை வரிசைப்படுத்த சிறிது நேரம் எடுக்கும் என்பதை நான் புரிந்துகொண்டேன். அவர்கள் தங்கள் அணியை கட்டமைக்க மூன்று யூனிட்டாக செயல்படவிருக்கிறார்கள். ஆம் ஆர்சிபி அணியில் என்னுடைய பயணம் முடிந்துவிட்டது என்று நான் கூறமாட்டேன், நான் மீண்டும் ஆர்சிபிக்கு திரும்ப நினைக்கிறேன். விளையாடுவதற்கு இது ஒரு சிறந்த உரிமையாக இருந்தது மற்றும் அங்கு எனது நேரத்தை மிகவும் ரசித்தேன்” என்று மேக்ஸ்வெல் பேசியுள்ளார்.

மேக்ஸ்வெல்

க்ளென் மேக்ஸ்வெல் கூறியிருப்பதை பார்த்தால் அவர் ஆர்சிபி அணியால் ஆர்டிஎம் மூலம் தக்கவைக்கப்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.