Rohit Sharma - Sanjiv Goenka x
T20

மும்பை-ரோகித்தின் பிரிவு உறுதி..? 2025 ஐபிஎல்லில் LSG-க்கு செல்கிறார்? அணி பதிவிட்ட ஸ்பெசல் Post!

Rishan Vengai

2024 ஐபிஎல் தொடர் முழுவதும் ‘ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ், ஹர்திக் பாண்டியா’ என்ற மூன்று பெயர்கள்தான் பெருமளவில் தலைப்புச் செய்திகளில் இருந்தன. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 கோப்பைகளை வென்று, 2023 வரை அணியின் வெற்றிக்கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவிடமிருந்து கேப்டன்சி பறிக்கப்பட்டு, 2024 ஐபிஎல் தொடரில் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். அதிலிருந்துதான் ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா பெயர்களுக்கு இடையேயான பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.

Rohit Sharma

இதற்கிடையில் “ரோகித் தரப்பிற்கும், மும்பை அணி நிர்வாகத்திற்கும் இடையிலான சர்ச்சை பேச்சுக்கள், ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியாவிற்கு இடையேயான வார்த்தை மோதல்கள், மும்பை அணிக்குள் இரண்டு பிரிவுகள்” என மும்பை இந்தியன்ஸ் அணி தொடர் முழுவதும் பேசுபொருளாகவே இருந்தது.

டிரேடிங் வரை சென்று திரும்பிவந்த ரோகித் சர்மா!

இதையெல்லாம் தாண்டி மும்பை அணி ரோகித் சர்மாவை மோசமாக நடத்தியதை அடுத்து, அவர் வேறு அணிக்கு செல்லும் காண்ட்ராக்டில் கையெழுத்து போடும் அளவிற்கே சென்றுவிட்டதாகவும், பின்னர் ஒப்பந்தத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது.

hardik - rohit

இதுகுறித்து ஒரு வீடியோவில் பேசியிருந்த ஆர்சிபி அணியின் பகுப்பாய்வாளரான பிரசன்னா அகோரம், “ப்ளூ சட்டை பேட்ஸ்மேன் மற்றும் ப்ளூ சட்டை பவுலர் இருவரும் அடுத்த ஐபிஎல் தொடரில் மஞ்சள் சட்டை அல்லது சிகப்பு சட்டை அணிக்கு வருவார்கள். இந்த தொடரிலேயே அதற்கான வர்த்தகம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது, ஆனால் அது கடைசி நேரத்தில் வீரர்கள் விலகியதால் கைவிடப்பட்டது. ஆனால் ஒன்றை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும் ப்ளூ சட்டை பேட்ஸ்மேன் அடுத்த ஐபிஎல் தொடரில் நிச்சயம் அந்த அணியிலிருந்து வெளியேறிவிடுவார். நான் எந்த வீரரின் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை” என்று கூறினார்.

வைரலான LSG ஓனருடனான உரையாடல்..

முதலில் சென்னை அணி அல்லது ஆர்சிபி அணிக்கு தான் ரோகித் சர்மா செல்லப்போகிறார் என்று பேசப்பட்ட நிலையில், லக்னோ அணி மற்றும் சன்ரைசர்ஸ் அணிக்கும் செல்ல வாய்ப்பு இருக்கிறது என்று பேசப்பட்டது. சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் “ரோகித் சர்மா கிடைத்தால் நன்றாக இருக்கும்” என்ற பதிலையும் கூறியிருந்தார்.

இதற்கிடையில் 2024 ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் மும்பை அணிக்காக தன்னுடைய கடைசி ஆட்டத்தில் ரோகித் சர்மா விளையாடப்போகிறார் என பல முன்னாள் வீரர்கள் குறிப்பிட்டனர். லக்னோ அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு LSG அணி உரிமையாளரான சஞ்சீவ் கோயங்காவுடன் ரோகித் சர்மா நீண்ட உரையாடலில் ஈடுபட்டார்.

அந்த காட்சியை பார்த்த ரசிகர்கள் அடுத்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு தான் ரோகித் சர்மா செல்லப்போகிறாரா என்ற கேள்வியை எழுப்பினர்.

மீண்டும் ரோகித்திற்காக ஸ்பெசல் எடிட்..

2025 ஐபிஎல் தொடரில் எந்த அணிக்கு ரோகித் சர்மா செல்வார் என்ற குழப்பம் இதுவரை நீடித்து வருகிறது. சென்னை அணிக்கு செல்வார் என கூறப்பட்ட நிலையில், ருதுராஜ் கெய்க்வாட்டை அடுத்த ஜென்ரேசன் வீரராக உருவெடுத்து வருகிறது சென்னை நிர்வாகம். அதேநேரத்தில் ஆர்சிபி அணி மோசமான இடத்திலிருந்து கம்பேக் கொடுத்து எலிமினேட்டர் வரை சென்றதால், டூபிளெசியை அவ்வளவு எளிதில் வெளியேற்றும் நிலைக்கு செல்லமாட்டார்கள். அதேபோல தான் சன்ரைசர்ஸ் அணியின் நிலைமையும் இருந்துவருகிறது.

அந்தவகையில் ரோகித் சர்மா லக்னோ அணிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன. இந்நிலையில் ரோகித் சர்மாவிற்காக ஒரு ஸ்பெசல் எடிட்டை பதிவிட்டிருக்கும் லக்னோ அணி, ரோகித் சர்மா LSG அணிக்கு தான் செல்லப்போகிறார் என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது.

எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் அந்த பதிவை பார்த்த ரசிகர்கள், 2025 ஐபிஎல்லில் ரோகித் சர்மா லக்னோ அணிக்கு தான் செல்லப்போகிறாரா என்ற கமண்ட்டை பதிவிட்டு வருகின்றனர்.