பரபரப்பாக நடந்துவரும் 2024 ஐபிஎல் தொடர் வரும் மே 26ம் தேதி முடிவடையும் நிலையில், 2024 டி20 உலகக்கோப்பை தொடரானது ஜூன் 2-ம் தேதி முதல் நடைபெறவிருக்கிறது.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கபட்ட நிலையில், தற்போது டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு சில வீரர்களின் பெயர் விடுபட்டபோதிலும், நடப்பு ஐபிஎல் தொடரில் நன்றாக செயல்பட்ட வீரர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
அந்தவகையில் மூன்று ஐபிஎல் அணியிலிருந்து மட்டும் அதிகப்படியான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில், இரண்டு அணியிலிருந்து ஒரு இந்திய வீரர் கூட தேர்வுசெய்யப்படவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1.ரோகித் சர்மா (கே)
2. விராட் கோலி
3. ஜெய்ஸ்வால்
4.சூர்யகுமார் யாதவ்
5. ரிஷப் பந்த் (WK)
6. சஞ்சு சாம்சன் (WK)
7. ஹர்திக் பாண்டியா (VC) ( பேட்டிங் ஆல்ரவுண்டர்)
8. ஷிவம் துபே (பேட்டிங் ஆல்ரவுண்டர்)
9. ரவீந்திர ஜடேஜா ( பவுலிங் ஆல்ரவுண்டர்)
10. அக்சர் பட்டேல் ( பவுலிங் ஆல்ரவுண்டர்)
11. குல்தீப் யாதவ் (ஸ்பின்னர்)
12. யுஸ்வேந்திர சாஹல் (ஸ்பின்னர்)
13. அர்ஷ்தீப் சிங் ( வேகப்பந்துவீச்சாளர்)
14. ஜஸ்பிரித் பும்ரா ( வேகப்பந்துவீச்சாளர்)
15. முகமது சிராஜ் ( வேகப்பந்துவீச்சாளர்)
காத்திருப்பு பட்டியல் - சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது மற்றும் ஆவேஷ் கான்
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை பொறுத்தவரையில், ஒரு சரிசமமான பலம் கொண்ட அணியாகவே தெரிகிறது. இந்திய அணி நிச்சயம் ”5 பேட்ஸ்மேன்கள், 3 ஆல்ரவுண்டர்கள், 3 பவுலர்கள்” என கலவையான அணியாக செல்லும் திட்டத்திலே அணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் பலத்தை பொறுத்தவரையில், பேட்டிங் வரிசையில் இடது மற்றும் வலது கை காம்பினேசன் வீரர்களை சரிசமமாக கொண்டுள்ளது. இரண்டு பக்கமும் அதிரடிக்கு பெயர்போன வீரர்கள் இருக்கின்றனர், ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே இருவரும் அணியில் இருப்பது பவுலிங் ரொட்டேசனில் உதவியாக இருக்கும்.
பலவீனம் என்ன இருக்கிறது என்றால் அது பந்துவீச்சில் மட்டும்தான், ஜஸ்பிரித் பும்ரா ஒருவர் மட்டுமே தற்போது நல்ல ஃபார்மில் ஜொலித்து வருகிறார். அவரை தவிர இருக்கும் அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் இருவரும் தங்களுடைய ஃபார்மை இழந்து தடுமாறிவருகின்றனர். அதே நேரத்தில் ஆட்டத்தை முடித்துவைக்கும் பினிசிங் ரோலில் ஹர்திக் பாண்டியா மட்டுமே இருக்கப்போகிறார், அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் சொதப்பிவரும் நிலையில் அதுவும் கவலைக்குரிய இடமாக மாறியுள்ளது. இதிலிருந்து மீண்டு அனைத்து வீரர்களும் ஃபார்முக்கு திரும்பினால் மட்டுமே கோப்பையை இந்திய அணி வெல்லும்.
உத்தேச அணி 11 வீரர்கள்:
பேட்ஸ்மேன்கள் - ரோகித் சர்மா (கே), ஜெய்ஸ்வால், விராட் கோலி, ரிஷப் பந்த் (WK), சூர்யகுமார் யாதவ்
ஆல்ரவுண்டர்கள் - ஷிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்டியா (பேட்டிங் ஆல்ரவுண்டர்), ரவீந்திர ஜடேஜா ( பவுலிங் ஆல்ரவுண்டர்)
பவுலர்கள் - குல்தீப் யாதவ் (ஸ்பின்னர்), அர்ஷ்தீப் சிங் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா (வேகப்பந்துவீச்சாளர்)
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்ற வீரர்களை, நடப்பு ஐபிஎல் தொடர் அணிகளுடன் ஒப்பிட்டு பார்த்தால் மூன்று அணியிலிருந்து அதிகப்படியான வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல 2 அணியிலிருந்து ஒரு வீரர் கூட இடம்பெறவில்லை. அந்த அணியிலிருந்து உலகக்கோப்பைக்கான தகுதியான வீரர்கள் இருப்பதாக ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
IPL அணி to T20 WC சென்ற வீரர்கள்?
மும்பை இந்தியன்ஸ் - 4 வீரர்கள் ( ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ்)
டெல்லி கேபிடல்ஸ் - 4 வீரர்கள் ( ரிஷப் பண்ட், கலீல் அகமது, குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல்)
ராஜஸ்தான் ராயல்ஸ் - 4 வீரர்கள் ( சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், யுஸ்வேந்திர சாஹல், ஆவேஷ் கான்)
சென்னை சூப்பர் கிங்ஸ் - 2 வீரர்கள் ( ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 2 வீரர்கள் ( விராட் கோலி, முகமது சிராஜ்)
பஞ்சாப் கிங்ஸ் - 1 வீரர் ( அர்ஷ்தீப் சிங்)
குஜராத் டைட்டன்ஸ் - 1 வீரர் ( சுப்மன் கில்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 1 வீரர் ( ரிங்கு சிங்)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 0 வீரர்கள் ( தகுதியுடைய வீரர்கள் - நடராஜன்)
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 0 வீரர்கள் ( தகுதியுடைய வீரர்கள் - கேஎல் ராகுல், ரவி பிஸ்னோய்)
முகமது சிராஜ் இருக்க வேண்டிய இடத்தில் நடராஜனும், அக்சர் பட்டேல் இருக்க வேண்டிய இடத்தில் ரவி பிஸ்னோயும், ஜெய்ஸ்வால் இருக்க வேண்டிய இடத்தில் கேஎல் ராகுலும் இடம்பெற்றிருக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.