இஷான் கிஷன் - பிலிப் சால்ட் web
T20

2025 ஐபிஎல் ஏலம்: இங்கிலாந்து அதிரடி வீரரை தூக்கிய RCB! ரூ.11.25 கோடிக்கு சென்ற இஷான் கிஷன்!

2025 ஐபிஎல் ஏலத்தில் இந்திய வீரர் இஷான் கிஷன் ரூ.11.25 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.

Rishan Vengai

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமில்லாமல் உலக கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த 2025 ஐபிஎல் திருவிழாவிற்கான மெகா வீரர்கள் ஏலமானது இன்றும், நாளையும் ( நவம்பர் 24 - 25) என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

ஒவ்வொரு அணிக்கும் 120 கோடி ஏலத்தொகை மற்றும் 6 ஆர்டிஎம் கார்டு ஆப்சன்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், 10 ஐபிஎல் அணிகளும் அவர்களுக்கான அணியை கட்டமைக்கும் முயற்சியில் இன்று ஏலத்தில் வீரர்களை வாங்கவுள்ளனர்.

ipl auction

367 இந்திய வீரர்கள், 210 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 577 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கும் நிலையில், பல ஸ்டார் வீரர்கள் மிகப்பெரிய ஏலத்திற்கு செல்வார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில், இன்றைய நாள் ஐபிஎல் ஏலமானது 3.30 PM மணி முதல் நடைபெற்று வருகிறது.

11.25 கோடிக்கு சென்ற இஷான் கிஷன்..

ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும், மும்பை அணிக்காக விளையாட வேண்டும் என உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்காமல் இருந்ததால் இந்திய அணியில் இஷான் கிஷனுக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி அவரையே கழற்றிவிட்டுள்ளது. இஷான் கிஷனை சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி ரூ.11.25 கோடிக்கு வாங்கியுள்ளது.

3 வீரர்களை வாங்கிய ஆர்சிபி..

ஆர்சிபி அணி மூன்று சிறந்த பிட்களை எடுத்துவந்துள்ளது. அதன்படி ஜோஸ் ஹசல்வுட் மீண்டும் ஆர்சிபி அணிக்கு வந்துள்ளார்.

ஹசல்வுட்

உடன் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜிதேஷ் சர்மா மற்றும் இங்கிலாந்தின் அதிரடி வீரரான பிலிப் சால்ட்டையும் ஆர்சிபி அள்ளியுள்ளது.

குர்பாஸ், ஆன்ரிச் நோர்க்யாவை அள்ளிய KKR..

ஆன்ரிச் நோர்க்யா

ரஹ்மனுல்லா குர்பாஸை ரூ.2 கோடிக்கும், தென்னாப்பிரிக்கா வேகப்பந்துவீச்சாளர் ஆன்ரிச் நோர்க்யாவை 6.50 கோடிக்கும் வாங்கியுள்ளது கொல்கத்தா அணி.