2025 ஐபிஎல் மெகா ஏலம் புதிய தலைமுறை
T20

🔴LIVE | IPL 2025 Auction | ஐபிஎல் ஏலம் முதல் நாள் | எந்த அணியில் எந்த வீரர்...? முழுமையான தகவல்!

2025 Auction முதல் நாள் - எந்த அணி எந்த வீரரை தேர்வு செய்கிறது...? உடனடி அப்டேட்டுக்கு இணைந்திருங்கள்....

Angeshwar G, Rishan Vengai, ஜெ.நிவேதா

IPL 2025 Auction-ன் முதல் நாள், தொடங்கி உள்ளது!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமில்லாமல் உலக கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த 2025 ஐபிஎல் திருவிழாவிற்கான மெகா வீரர்கள் ஏலமானது இன்றும், நாளையும் (நவம்பர் 24 - 25) என இரண்டு நாட்கள் நடைபெறவிருக்கிறது.

ஒவ்வொரு அணிக்கும் 120 கோடி ஏலத்தொகை மற்றும் 6 ஆர்டிஎம் கார்டு ஆப்சன்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், 10 ஐபிஎல் அணிகளும் அவர்களுக்கான அணியை கட்டமைக்கும் முயற்சியில் இன்று ஏலத்தில் ஈடுபட உள்ளனர்.

2025 ஐபிஎல் மெகா ஏலம்

367 இந்திய வீரர்கள், 210 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 577 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கும் நிலையில், ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் முதலிய 3 இந்திய ஸ்டார் வீரர்கள் மிகப்பெரிய ஏலத்திற்கு செல்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இன்றைய நாள் ஐபிஎல் ஏலமானது 3.30 PM மணிக்கு தொடங்கி 10.30 PM வரை நடைபெறவிருக்கிறது. அதன்படி ஏலம் தற்போது தொடங்கி உள்ளது... அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்ன அப்டேட்களுக்கு, இங்கே இணைந்திருங்கள்!

அர்ஷ்தீப் சிங்கை தக்கவைத்தது பஞ்சாப் கிங்ஸ் !

ஐபிஎல் ஏலத்தில் முதல் வீரராக அர்ஷ்தீப் சிங் ஏலத்திற்கு வந்தார். அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு வந்த அவரை முதலில் சென்னையும் டெல்லியும் மாறி மாறி கேட்டு வந்தன. 7 கோடியை தாண்டிய நிலையில் சென்னை விலகிக் கொள்ள டெல்லியும், குஜராத்தும் ஏலத்தில் கேட்டன. ரூ 10 கோடியில் பெங்களூருவில் இணைந்து கொண்டது. ரூ 11 கோடியில் டெல்லி விலகிக் கொள்ள ராஜஸ்தான் கோதாவில் இறங்கியது.

Arshdeep Singh

இறுதியில் ஹைதராபாத்தும் ராஜஸ்தானும் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. இறுதியில் ரூ. 15.75 கோடிக்கு ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்தது. பின் RTMல் பஞ்சாப் களத்திற்கு வர

ரூ 18 கோடிக்கு பஞ்சாப் அணிக்கே மீண்டும் சென்றார் அர்ஷ்தீப் சிங்...!

குஜராத்தில் ரபாடா

தென்னாப்ரிக்க வீரரான ரபாடா ரூ. 2 கோடி அடிப்படை விலைக்கு இடம்பிடித்திருந்தார். முதலில் பெங்களூரு அணியும், குஜராத்தும் மாறி மாறி ஏலத்தில் எடுத்தன. பின் மும்பையும் இணைந்து கொண்டது. இறுதியில், ரூ. 10.75 கோடிக்கு குஜராத் அணியால் வாங்கப்பட்டார்.

ஸ்ரேயாஸ் ஐயர்

ஸ்ரேயாஸ் ஐயர்

ஸ்ரேயாஸ் ஐயர் அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். முதலில் பஞ்சாப்பும், கொல்கத்தாவும் போட்டி போட்டன. பின் டெல்லியும் இணைந்து கொண்டது. இறுதியில், 10 கோடிக்கு மேல் பஞ்சாப் அணியும் இணைந்து கொண்டது. இறுதியில், டெல்லியும் பஞ்சாப்பும் கடுமையாக போட்டி போட்டன. இறுதியில் ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் இதுவே அதிக தொகையாகும்.

ஸ்ரேயாஸ் சாதனை

ஸ்ரேயாஸ் ஐயர்

ஐபிஎல் ஏலத்தில் இதுவரை மிட்செல் ஸ்டார்க்தான் ரூ.24.75 கோடி என அதிக தொகைக்கு கொல்கத்தா அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டவர். இன்று ஸ்ரேயாஸ் ஐயர் அந்த சாதனையை முறியடித்தார். தற்போது அவர் ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

ஜாஸ் பட்லர்

ஜோஸ் பட்லர்

இங்கிலாந்து வீரரான ஜாஸ் பட்லர் அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். முதலில் பஞ்சாப்பும், குஜராத்தும் சண்டை போட்டன. இறுதியாக குஜராத் ரூ. 15.75 கோடிக்கு ஜாஸ் பட்லரை ஏலத்தில் எடுத்தது.

 மிட்செல் ஸ்டார்க்

மிட்செல் ஸ்டார்க்

கொல்கத்தா அணியால் கடந்த ஆண்டு ரூ. 24.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டிருந்தார். நடப்பாண்டில் அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலத்தில் வந்தார். கொல்கத்தாவும், டெல்லியும் சண்டைபோட்டன. 10 கோடியை தாண்டிய நிலையில் ஆர்சிபி களத்திற்கு வந்தது. இறுதியாக மிட்செல் ஸ்டார்க் டெல்லி அணியால் ரூ.11.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்

ரிஷப் பண்ட் சாதனை

கங்குலி, ரிஷப் பண்ட்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். பெங்களூரு அணியும் லக்னோ அணியும் ஆரம்பத்தில் சண்டை போட்டன. இடையிடையே சென்னை அணியும் தலையைக் காட்டியது. பின் ஹைதராபாத் அணி கடுமையாக சண்டைக் கட்டியது. இறுதியில் ரூ. 20.75 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டார். பின் RTM முறையில் டெல்லி வந்தது. இறுதியில் எதிர்பாராத விதமாக ரூ. 27 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டார் ரிஷப் பண்ட்.

முகம்மது ஷமி

முகமது ஷமி

வேகப்பந்து வீச்சாளரான முகம்மது ஷமி அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் வந்தார். ஆரம்பம் முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் போட்டியிட்டன. 8 கோடிகள் தாண்டிய நிலையில் சென்னை விலகிக்கொள்ள லக்னோ கோதாவில் குதித்தது. ரூ. 10 கோடியில் ஹைதராபாத் அணியும் உள்ளே வந்தது. RTM வேண்டாம் என குஜராத் விலகிக் கொள்ள ஹைதராபாத் ரூ. 10 கோடிக்கு முகம்மது ஷமியை வாங்கியது.

டேவிட் மில்லர்

தென் ஆப்ரிக்க வீரரான டேவிட் மில்லர் அடிப்படை விலையான ரூ.1.50 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். முதலில் குஜராத் ஆர்சிபியும் போட்டியிட்டன. இறுதியில் ரூ. 7.50 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டார்.

சாஹல்

சாஹல்

சாஹல் அடிப்படை வீரரான 2 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். முதலில் சென்னையும் குஜராத்தில் போட்டியிட்டது. பின் சென்னை விலகிக்கொள்ள லக்னோவும் பஞ்சாப்பும் முட்டி மோதியது. இறுதியாக, 14 கோடியில் பெங்களூருவும் உள்ளே வர தொடர்ந்து ஹைதராபாத்தும் 14.75 கோடியில் உள்ளே வந்தது. இறுதியில், 18 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

முகம்மது சிராஜ்

சிராஜ்

முகம்மது சிராஜ் அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். அவருக்கு முதலில் சென்னையும் குஜராத்தும் போட்டி போட்டுக்கொண்டு எடுத்தது. 7 கோடிக்கும் மேல் சென்னை விலகிக்கொள்ள ராஜஸ்தான் உள்ளே வந்தது. இறுதியில், ரூ. 12.25 கோடிக்கு குஜராத் அணியால் வாங்கப்பட்டார்.

லியன் லிவிங்ஸ்டன்

Liam Livingstone

லியன் லிவிங்ஸ்டன் அடிப்படை விலையான 2 கோடியில் ஏலத்திற்கு வந்தார். முதலில் ஆர்சிபியும், ஹைதராபாத்தும் சண்டையிட்டன. பின் டெல்லியும் உள்ளே வந்தது. இறுதியில் 7 கோடிக்கு மேல் சென்னையும் தலையைக் காட்டியது. கடைசியாக ரூ.8.75 கோடிக்கு பெங்களூரு அணியால் வாங்கப்பட்டார்.

கே எல் ராகுல்

KL Rahul

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கே எல் ராகுல் அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். முதலில் ஆர்சிபியும் கொல்கத்தாவும் பெங்களூருவும் கடுமையாக போட்டியிட்டன. 11 கோடிக்கு சென்ற போது டெல்லி அணி உள்ளே வந்தது. சென்னையும் இறுதியில் போட்டியிட்ட நிலையில் ரூ. 14 கோடிக்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டார்.

உணவு இடைவேளை!

ஹேரி ப்ரூக்

ஹேரி ப்ரூக் அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். ஆரம்பம் முதலே சென்னையும் பஞ்சாப்பும் ஏலத்தை மாறி மாறி கேட்டது. இறுதியில் 6 கோடிக்கு வந்ததும் சென்னை அணி விலகிக்கொள்ள டெல்லி உள்ளே வந்தது. இறுதியில், ரூ 6.25 கோடிக்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டார்.

தேவ்தத் படிக்கல்

padikkal

தேவ்தத் படிக்கல் அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலத்திற்கு வந்தும் எந்த அணியாலும் வாங்கப்படாததால் ஏலத்தில் எடுக்கப்படவில்லை.

எய்டன் மார்க்ரம்

மார்க்ரம்

தென்னாப்பிரிக்கா கேப்டன் எய்டன் மார்க்ரமை அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.

டெவான் கான்வே

2024 ஐபிஎல் ஏலத்தில் ஒருவீரரை கூட எடுக்காமல் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நீண்ட நேர காத்திருப்பிற்கு பிறகு அவர்கள் வெளியேற்றிய நியூசிலாந்து வீரர் டெவான் கான்வேவை ரூ.6.25 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது.

ராகுல் திரிப்பாதி

ராகுல் திரிப்பாதி அடிப்படை விலையான 75 லட்சத்திற்கு ஏலத்திற்கு வந்தார். ஆரம்பம் முதலே சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மாறி மாறி ஏலத்தில் எடுத்தது. இறுதியில், ரூ. 3.40 கோடிக்கு சென்னை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ஏலத்தில் எடுக்கப்படாத வார்னர்

டேவிட் வார்னர்

தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். ஆனால் எந்த அணியாலும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை.

ஜேக் ப்ரேஸர் மெக்கர்க் 

டெல்லி அணியில் இருந்த ஜேக் ப்ரேஸர் மெக்கர்க் அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். பஞ்சாப்பும் லக்னோவும் போட்டியிட்டது. இறுதியில் பஞ்சாப் அணி ரூ. 5.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்க டெல்லி அணி 9 கோடிக்கு தக்கவைத்துக்கொண்டது.

ஹர்ஷல் படேல்

வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷல் படேல் அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். குஜராத், ஹைதராபாத் அணிகள் மோதின. இறுதியில், 8 கோடியில் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டார்.

ரச்சின் ரவீந்திரா

ரச்சின்

சென்னை அணியில் விளையாடிய ரச்சின் ரவீந்திரா அடிப்படை விலையான ரூ. 1.50 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். சென்னை அணியும் பஞ்சாப் அணியும் ஆரம்பத்தில் இருந்து ரச்சின் ரவீந்திராவை ஏலத்தில் எடுக்க போட்டி போட்டது. இறுதியில், பஞ்சாப் அணி ரச்சின் ரவீந்திராவை ரூ. 3.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. RTM உபயோகித்த சென்னை ரூ. 4 கோடிக்கு தக்கவைத்தது.

அஸ்வின்

அஸ்வின்

சென்னை அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். ஆரம்பத்தில் சென்னையும் லக்னோவும் போட்டிபோட்டன. இடையே பெங்களூரு வந்தாலும், சென்னை விடாப்பிடியாக இருந்தது. பின் ராஜஸ்தான் இணைய பெங்களூரு விலகிக் கொண்டது. இறுதியாக அஸ்வின் ரூ.9.75 கோடிக்கு சென்னையால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

வெங்கடேஷ் ஐயர்

வெங்கடேஷ் ஐயர்

வெங்கடேஷ் ஐயர் அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். கொல்கத்தாவும் லக்னோவும் ஆரம்பத்தில் இருந்தே வெங்கடேஷ் ஐயரை எடுக்க போட்டியிட்டது. பின்னர் பெங்களூரு களத்திற்கு வந்தது. இறுதியில், பெங்களூரு அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் வெங்கடேஷ் ஐயர் ரூ. 23.75 கோடிக்கு கொல்கத்தா அணியே ஏலத்தில் எடுத்தது.

மார்கஸ் ஸ்டாய்னிஸ்

மார்கஸ் ஸ்டாய்னிஸ் அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். இவருக்கு சென்னை அணியும், பெங்களூரு அணியும் போட்டியிட்டது. இறுதியில், பஞ்சாப் அணி நுழைந்த ரூ. 11 கோடிக்கு ஏலத்திற்கு எடுத்தது.

மிட்செல் மார்ஷ்

மிட்செல் மார்ஷ்

மிட்செல் மார்ஷ்ஷை அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். தொடர்ந்து சன்ரைசர்ஸ், லக்னோ ஆகிய அணிகள் அவரை வாங்க முன்வந்த நிலையில் இறுதியில் அவரை லக்னோ அணி ரூ 3.40 கோடிக்கு வாங்கியது.

கிளென் மேக்ஸ்வெல்

கிளென் மேக்ஸ்வெல்

கிளென் மேக்ஸ்வெல் அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை ஆகிய அணிகள் அவரை வாங்க வந்த நிலையில் இறுதியில் அவரை பஞ்சாப் அணி ரூ 4.20 கோடிக்கு வாங்கியது.

குவிண்டன் டி காக்

குவின்டன் டி காக்

குவிண்டன் டி காக் அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். மும்பை, சன் ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா ஆகிய அணிகள் அவரை வாங்க வந்த நிலையில் இறுதியில் அவரை கொல்கத்தா அணி ரூ 3.60 கோடிக்கு வாங்கியது.

ஜானி பாஸ்ட்ரோ

ஃபில் சால்ட் அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். ஆனால் அவரை யாரும் எடுக்காததால், Unsold வீரரானார் அவர்.

ஃபில் சால்ட்

ஃபில் சால்ட்

ஃபில் சால்ட் அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். பெங்களூரு, கொல்கத்தா போன்ற அணிகள் அவரை வாங்க வந்த நிலையில் இறுதியில் பெங்களூரு அணி ரூ 11.50 கோடிக்கு வாங்கியது.

ரஹ்மானுல்லா குர்பாஸ்

ரஹ்மானுல்லா குர்பாஸ்

ரஹ்மானுல்லா குர்பாஸ் அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். அவரை கொல்கத்தா அணி ரூ 2 கோடி என்ற அடிப்படை விலைக்கே வாங்கிவிட்டது.

இஷான் கிஷன்

இஷான் கிஷன்

இஷான் கிஷன் அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். பஞ்சாப், டெல்லி போன்ற அணிகள் அவரை வாங்க வந்த நிலையில் இறுதியில் ஐதராபாத் அணி ரூ 11.25 கோடிக்கு வாங்கியது.

ஜிதேஷ் சர்மா

ஜிதேஷ் சர்மா

இந்தியாவின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மாவை ரூ.11 கோடிக்கு விலைக்கு வாங்கியது ஆர்சிபி.

ஜோஸ் ஹசல்வுட்

Hazelwood

ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளரான ஜோஸ் ஹசல்வுட் மீண்டும் ஆர்சிபி அணிக்கு திரும்பியுள்ளார். அவரை 12.50 கோடிக்கு ஆர்சிபி விலைக்கு வாங்கியுள்ளது.

பிரசித் கிருஷ்ணா

பிரசித் கிருஷ்ணா

இந்திய வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவை 9.50 கோடிக்கு வாங்கியுள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி.

அவேஷ் கான் முதல் ஹசரங்கா வரை...

அவேஷ் கான் அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். அவரை லக்னோ அணி ரூ 9.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.

அன்ரிச் நார்சே அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். அவரை கொல்கத்தா அணி ரூ 6.50 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.

ஜோஃப்ரா ஆர்ச்சர் அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். அவரை ராஜஸ்தான் அணி ரூ 12.50 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.

ஜோஃப்ரா ஆர்ச்சர்

கலீல் அகமது அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். அவரை சென்னை அணி ரூ 4.80 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.

தமிழக வீரர் நடராஜன் அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். அவரை டெல்லி அணி 10.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.

ட்ரெண்ட் பௌல்ட் அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். அவரை மும்பை அணி ரூ 12.50 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.

மஹேஷ் தீக்‌ஷனா அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். அவரை ராஜஸ்தான் அணி 4.40 ரூபாய் கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.

மஹேஷ் தீக்‌ஷனா

ராகுல் சாஹர் அடிப்படை விலையான 1 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். அவரை ஐதராபாத் ரூ 3.20 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.

ஆப்கன் வீரர் வாகர் சலேம்கெய்ல் அடிப்படை விலை ரூ. 75 லட்சத்துக்கு ஏலத்துக்கு வந்தார். அவரை வாங்க எந்த அணியும் முன்வராததால், அவர் Unsold வீரராகிவிட்டார்

ஆஸ்திரேலிய வீரர் ஆடம் சாம்பா, அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். அவரை ஐதராபாத் அணி 2.40 ரூபாய் கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.

இலங்கை வீரர் ஹசரங்கா அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். அவரை ராஜஸ்தான் அணி 5.20 ரூபாய் கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.

நூர் அகமது

நூர் அகமது

இலங்கை வீரர் நூர் அகமது அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். அவரை சென்னை அணி ரூ 10 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.

அடுத்தடுத்து ஏலம்போன இளம் வீரர்கள்!

இந்திய வீரர் அதர்வா தயிடே அடிப்படை விலையாக ரூ 30 லட்சத்துக்கு ஏலத்திற்கு வந்தார். அவரை ஐதராபாத் அணி அதே விலைக்கு ஏலத்தில் வாங்கியது.

அன்மோல்ப்ரீத் சிங், அடிப்படை விலையாக ரூ 30 லட்சத்துக்கு ஏலத்திற்கு வந்தார். அவரை எந்த அணியும் ஏலத்துக்கு எடுக்காததால் அவர் Unsold வீரராக அறிவிக்கப்பட்டார்.

இந்திய வீரர் நேஹல் வதேரா அடிப்படை விலையாக ரூ 30 லட்சத்துக்கு ஏலத்திற்கு வந்தார். அவரை பஞ்சாப் அணி ரூ 4.20 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.

நேஹல் வதேரா

இந்திய வீரர் அங்க்ரீஷ் ரகுவன்ஷி அடிப்படை விலையாக ரூ 30 லட்சத்துக்கு ஏலத்திற்கு வந்தார். அவரை கொல்கத்தா அணி ரூ 3 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.

இந்திய வீரர் கருண் நாயர் அடிப்படை விலையாக ரூ 30 லட்சத்துக்கு ஏலத்திற்கு வந்தார். அவரை டெல்லி அணி ரூ 50 லட்சத்துக்கு விலைக்கு ஏலத்தில் வாங்கியது.

இந்திய வீரர் யாஷ் தல் அடிப்படை விலையாக ரூ 30 லட்சத்துக்கு ஏலத்திற்கு வந்தார். அவரை எந்த அணியும் ஏலத்துக்கு எடுக்காததால் அவர் Unsold வீரராக அறிவிக்கப்பட்டார்.

இந்திய வீரர் அபினவ் மனோஹர் அடிப்படை விலையாக ரூ 30 லட்சத்துக்கு ஏலத்திற்கு வந்தார். அவரை ஐதராபாத் அணி ரூ 3.20 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.

இந்திய வீரர் நிஷந்த் சிந்து, அடிப்படை விலையாக ரூ 30 லட்சத்துக்கு ஏலத்திற்கு வந்தார். அவரை குஜராத் அணி அதே விலைக்கு ஏலத்தில் வாங்கியது.

இந்திய வீரர் சமீர் ரிஸ்வி அடிப்படை விலையாக ரூ 30 லட்சத்துக்கு ஏலத்திற்கு வந்தார். அவரை டெல்லி அணி ரூ 95 லட்சத்துக்கு ஏலத்தில் வாங்கியது.

நமன் திர்

இந்திய வீரர் நமன் திர், அடிப்படை விலையாக ரூ 30 லட்சத்துக்கு ஏலத்திற்கு வந்தார். அவரை மும்பை அணி ரூ 5.25 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.

அப்துல் சமாத்

அப்துல் சமாத்

இந்திய இளம்வீரர் அப்துல் சமாத் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் ரூ.4.20 கோடிக்கு எடுக்கப்பட்டுள்ளார்.

ஹர்ப்ரீத் ப்ரார்

ஹர்ப்ரீத் ப்ரார்

இளம் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஹர்ப்ரீத் ப்ரார் பஞ்சாப் கிங்ஸ் அணியால் 1.50 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.

விஜய் சங்கர்

விஜய் சங்கர்

தமிழகத்தைச்சேர்ந்த ஆல்ரவுண்டர் வீரரான விஜய் சங்கரை சிஎஸ்கே அணி ரூ.1.20 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது.

மஹிபால் லோம்ரார்

மஹிபால் லோம்ரார்

இந்திய ஆல்ரவுண்டர் வீரரான மஹிபால் லோம்ரார் குஜராத் டைட்டன்ஸ் அணியால் 1.70 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார்.

அஷுதோஷ் சர்மா

அஷுதோஷ் சர்மா

கடந்த 2024 ஐபிஎல் தொடரில் நட்சத்திர வீரராக ஜொலித்த அஷுதொஷ் சர்மா, 2025 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியால் ரூ.3.80 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.

உத்கர்ஷ் சிங்

அன்கேப்டு இந்திய ஆல்ரவுண்டரான உத்கர்ஷ் சிங் யாராலும் வாங்கப்படவில்லை.

குமார் குஷக்ரா

குமார் குஷக்ரா

அன்கேப்டு இந்திய விக்கெட் கீப்பர் பேட்டரான குமார் குஷக்ரா குஜராத் டைட்டன்ஸ் அணியால் 65 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளார்.

ராபின் மின்ஸ்

ராபின் மின்ஸ்

அன்கேப்டு இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் மற்றும் முதல் பழங்குடியின வீரரான ராபின் மின்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியால் 65 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளார்.

ஆர்யன் ஜுயல்

அன்கேப்டு இந்திய விக்கெட் கீப்பர் பேட்டரான ஆர்யன் ஜுயல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் 35 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளார்.

விஷ்னு வினோத்

விஷ்னு வினோத்

அன்கேப்டு இந்திய விக்கெட் கீப்பர் பேட்டரான விஷ்னு வினோத் பஞ்சாப் கிங்ஸ் அணியால் 95 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளார்.

ரசிக் தார் சலாம்

ரசிக் தார் சலாம்

கடந்த 2024 ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்துவீச்சாளர் ரசிக் சலாமை ஆர்சிபி அணி ரூ.6 கோடிக்கு எடுத்துள்ளது.

ஆகாஷ் மத்வால்

ஆகாஷ் மத்வால்

மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா இல்லாதபோது பந்துவீச்சு யூனிட்டை முன் நின்று வழிநடத்திய ஆகாஷ் மத்வால், 2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.1.20 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.

மோஹித் சர்மா

மோஹித் சர்மா

குஜராத் டைட்டன்ஸ் அணியில் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்த மோஹித் சர்மா, 2025 ஐபிஎல் ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியால் 2.20 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.

விஜய்குமார் வைசாக்

விஜய்குமார் வைசாக்

இந்திய வேகப்பந்துவீச்சாளர் விஜய்குமார் வைசாக் பஞ்சாப் கிங்ஸ் அணியால் 1.80 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.

வைபவ் அரோரா

வைபவ் அரோரா

இந்திய வேகப்பந்துவீச்சாளர் வைபவ் அரோரா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 1.80 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.

யாஷ் தாக்கூர்

யாஷ் தாக்கூர்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் சிறப்பாக பந்துவீசி எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்த யாஷ் தக்கூர், 2025 ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியால் ரூ.1.60 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.

கார்த்திக் தியாகி

கார்த்திக் தியாகி

2023 ஐபிஎல் தொடரில் 4 கோடிக்கு மேல் வாங்கப்பட்ட கார்த்திக் தியாகி, 2025 ஐபிஎல் தொடரில் அன்சோல்டாக சென்றுள்ளார்.

சிமர்ஜீத் சிங்

simarjeet singh

கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக பந்துவீசிய சிமர்ஜீத் சிங், 2025 ஐபிஎல் ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியால் 1.50 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.

சுயாஷ் சர்மா

சுயாஷ் சர்மா

இந்திய சுழற்பந்துவீச்சாளர் சுயாஷ் சர்மா ஆர்சிபி அணியால் ரூ.2.60 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.

கரண் சர்மா

கரண் சர்மா

கடந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் இருந்த கரண் சர்மாவை 50 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்துள்ளது.

மயங்க் மார்கண்டே

மயங்க் மார்கண்டே

சுழற்பந்துவீச்சாளர் மயங்க் மார்கண்டேவை 30 லட்சத்துக்கு கொல்கத்தா அணி எடுத்துள்ளது.

பியூஷ் சாவ்லா

பியூஷ் சாவ்லா

மூத்த சுழற்பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லா 2025 ஐபிஎல் தொடரில் வாங்கப்படவில்லை.

குமார் கார்த்திகேயா

குமார் கார்த்திகேயா

இந்திய சுழற்பந்துவீச்சாளர் குமார் கார்த்திகேயா 30 லட்சத்துக்கு ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

மனவ் சுதர்

மனவ் சுதர்

இந்திய சுழற்பந்துவீச்சாளர் மனவ் சுதர் 30 லட்சத்துக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

ஸ்ரேயாஸ் கோபால்

ஸ்ரேயாஸ் கோபால்

இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஷ்ரேயாஸ் கோபால் 2025 ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்படவில்லை.

இன்றைய நாள் ஐபிஎல் ஏலம் முடிவடைந்தது.. நாளை மதியம் 3.30 மணிக்கு இரண்டாவது நாள் ஏலம் நடைபெறும்..