rr vs srh twitter
T20

RR Vs RCB | எலிமினேட்டர் சுற்று.. சமபலத்தில் இரு அணிகள்... வெளியேறப்போவது யார்?

நடப்பு சீசனின் எலிமினேட்டர் போட்டியில் இன்று, rcb vs rr ஆகிய இரு அணிகளும், சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம் என்றே சொல்லப்படுகிறது.

Prakash J

நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்றுள்ள முதலாவது குவாலிபயரில் ஹைதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா அணி 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த நிலையில் நடப்பு சீசனின் எலிமினேட்டர் போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத இருக்கிறது.

இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணி வரும் குவாலிபயர் 2ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக களமிறங்கும். தோற்கும் அணி நடப்பு ஐபிஎல்லில் இருந்து வெளியேறும். இதற்கிடையே இன்றைய போட்டி, யாருக்குச் சாதகம் எனப் பார்ப்போம். அந்த வகையில், இந்த அகமதாபாத் ஸ்டேடியம் இரு அணிகளுக்கும் சொந்த ஸ்டேடியம் இல்லை. ஆனால் இம்மைதானத்தின் ஆடுகளம் பேட்டிற்கு சாதகமான பிட்சாக பார்க்கப்படுகிறது. கடந்த சில ஐபிஎல் சீசன்களில் இங்கு அதிக ஸ்கோர்கள் குவிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: “மேட்சுல வயசாயிடுச்சுனு யாரும் பாவம் பார்க்க மாட்டாங்க..” வெளிப்படையாகப் பேசிய தோனி!

எனவே, இன்றைய போட்டியிலும் அதிகமான ரன்கள் குவிக்கப்படலாம். பொதுவாக, நடப்பு சீசனில் இந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் இரண்டாவது பேட்டிங் செய்த அணியே அதிகம் வெற்றிபெற்றுள்ளது. ஆகையால், இன்றைய போட்டியில் டாஸ் முக்கியப் பங்கு வகிக்கும் எனத் தெரிகிறது. அதனால் டாஸ் ஜெயிக்கும் அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்யும் எனக் கணிக்கப்பட்டது. அதன்படி ராஜஸ்தான் தேர்வும் செய்துள்ளது.

முன்னதாக ஐபிஎல் தொடக்கத்தில் (முதல் பாதியில்) ராஜஸ்தான் அணி அதிரடியாக விளையாடி வெற்றிகளை குவித்த நிலையில், பிற்பாதியில் தேக்க நிலையை சந்தித்தது.

எனினும், புள்ளிப் பட்டியலில் 3வது இடம்பிடித்தது. மறுபுறம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி லீக் சுற்றின் முதல் 8 ஆட்டங்களில் 7-ல் தோல்வி அடைந்த நிலையில், அதன்பின்னர் போராட்டக் குணத்துடன் செயல்பட்டு கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெளியேற்றி பிளே ஆஃப் சுற்றில் கடைசி அணியாக கால்பதித்தது. அவ்வணியில், விராட் கோலி ரன் இயந்திரமாக திகழ்ந்து வருகிறார்.

இவரை வீழ்த்த ராஜஸ்தான் கடுமையாகப் போராடும். முக்கியமாக, இரண்டு அணிகளும் எதிரணியினரின் நிறை, குறைகள் பற்றி நிறைய அறிந்து இருப்பதால் இன்றைய போட்டியிலும் விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்காது எனக் கூறப்படுகிறது. என்றாலும் ஏறக்குறைய இரு அணிகளும், சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம் என்றே சொல்லப்படுகிறது.

இதையும் படிக்க: தோனி இல்லாத CSK? ரசிகர்களுக்கு சாத்தியமா.. சங்கடமா? மாற்றுவதற்கான வழி என்ன?