நடப்பு 2024 ஐபிஎல் தொடரில் எப்போதும் இல்லாத வகையில் பேட்டிங்கின் மூலம் பல உலகசாதனைகளை படைக்கப்பட்டுவருகின்றன. ஒவ்வொரு அணியில் இருக்கும் அதிரடி வீரர்களும் 200-250 ஸ்டிரைக்ரேட்டில் விளையாடி, பந்துவீச்சாளர்களுக்கு நைட்மேராக விளங்கிவருகின்றனர்.
’பந்துவீச்சாளர்கள் பாவம் பா’ என கூறுமளவு 30 முறைக்கும் மேல் 200 ரன்களுக்கு மேலான டோட்டல்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதுவரை நடப்பு ஐபிஎல் தொடரில் படைக்கப்பட்டுள்ள அனைத்து பிரமாண்ட சாதனைகளும் பேட்டில் இருந்து மட்டுமே வந்துள்ளன.
கடந்த ஐபிஎல் தொடர்களில் இல்லாதவகையில், நடப்பு ஐபிஎல் தொடரில் குறைவான பந்துகளில் 1000 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளது. ”பவுலர்களை யாராவது காப்பாத்துங்க” என பல ஜாம்பவான் வீரர்களே சொல்லுமளவு, நடப்பு ஐபிஎல்லில் பேட்ஸ்மேன்கள் பந்துவீச்சாளர்கள் மீது ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.
கடந்த 2023 மற்றும் 2022 ஐபிஎல் தொடர்களில் 15390 பந்துகள், 16269 பந்துகளில் 1000 சிக்சர்கள் அடிக்கப்பட்டதே சாதனையாக இருந்துவந்தது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் வெறும் 13079 பந்துகளிலேயே 1000 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 26ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில், டி20 கிரிக்கெட் வரலாற்றில் அடிக்கப்பட்ட மிகப்பெரிய ரன்சேஸ் பதிவுசெய்யப்பட்டது.
முதலில் ஆடிய கொல்கத்தா அணி 261 ரன்களை குவித்து எட்டவே முடியாத ஒரு இலக்கை பஞ்சாப் அணிக்கு நிர்ணயித்தது. ஆனால் நம்பிக்கையை கடைசிவரை விடாமல் இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி, வெறும் 18.4 ஓவர் முடிவிலேயே 262 ரன்களை குவித்து உலகசாதனை ரன்சேஸை பதிவுசெய்தது. இதற்கு முன்பு 259 ரன்களை சேஸ் செய்ததே டி20 கிரிக்கெட்டில் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச ரன்சேஸ்ஸாக இருந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணி அதை உடைத்து புதிய சாதனையை வரலாற்றில் எழுதியது.
262 ரன்கள் ரன்சேஸ் செய்த கொல்கத்தா மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், ஒரு டி20 கிரிக்கெட் போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச பவுண்டரிகள் மற்றும் சிக்சர்கள் பதிவுசெய்யப்பட்ட.
இரண்டுபுறமும் சிக்சர் மழைகளை பொழிந்த அணிகள் மொத்தமாக 37 பவுண்டரிகள், 42 சிக்சர்களை அடித்து உலகசாதனையை படைத்தனர். இதற்கு முன்பு 38 சிக்சர்கள் அடிக்கப்பட்டதே அதிகப்படியான சிக்சர்களாக இருந்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டர்கள், ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச டோட்டல் என்ற 287 ரன்களை குவித்து மிரட்டிவிட்டனர்.
இது ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச டோட்டல் மற்றும் சர்வதேச அளவில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச டோட்டல் என்ற மிரமாண்ட சாதனையாக மாறியது.
அபிஷேக் சர்மா (35 சிக்சர்கள்), டிராவிஸ் ஹெட் (31), ஹென்ரிச் கிளாசன் (31) முதலிய மூன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர்கள், 2024 ஐபிஎல் தொடரின் பெரிய ஹிட்டர்களாக மாறி ஒரு புதிய வரலாற்று சாதனைக்கு SRH அணியை அழைத்துச்சென்றனர்.
ஒரு ஐபிஎல் தொடரில் 146 சிக்சர்களை அடித்திருக்கும் சன்ரைசர்ஸ் அணி, இதற்கு முன்பு 2018ம் ஆண்டு சிஎஸ்கே அடித்திருந்த 145 சிக்சர்கள் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளது.