ஐபிஎல்லுக்குப் பிறகு உலக ரசிகர்களுக்கு விருந்து படைக்கப்போகும் டி20 உலகக்கோப்பை போட்டிகள் தொடங்க இருக்கின்றன. அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற இருக்கும் இத்தொடர் ஜூன் 2-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்கான இந்திய அணி, இன்று (ஏப்.30) அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வணியில் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் ஆகியோர் விக்கெட் கீப்பர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் விராட் கோலி, ஷிவம் துபே ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இவர்களைத் தவிர, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷீப் சிங், சூர்யகுமார் யாதவ், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும் பந்துவீச்சாளர்களாக அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த 15 பேரைத் தவிர, மாற்று வீரர்களாக ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அஹமது, ஆவேஷ் கான் ஆகிய 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ரோகித் சர்மா (கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (வி.கீ), சஞ்சு சாம்சன் (வி.கீ), ஹர்திக் பாண்டியா (து.கே), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
மாற்று வீரர்கள்
ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அஹமது, ஆவேஷ் கான்