ind vs aus cricinfo
T20

’நீங்க மட்டும் தான் அடிப்பீங்களா’ இந்திய பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கும் மார்ஷ், டிராவிஸ் ஹெட்!

2024 டி20 உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 205 ரன்களை குவித்துள்ளது இந்திய அணி.

Rishan Vengai

2024 டி20 உலகக்கோப்பை தொடரின் மிக முக்கியமான போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வியடைந்த ஆஸ்திரேலியா அணி, வெல்லவேண்டிய கட்டாயத்துடன் இந்திய அணியுடன் விளையாடிவருகிறது.

போட்டிக்கு முன்னதாக இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது குறித்து பேசிய ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஸ், “அடுத்த போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டும், அதற்கு சரியான அணி இந்தியாதான்” என்று எச்சரிக்கும் வகையில் பேசியிருந்தார்.

mitchell marsh

ஆனால் மிட்செல் மார்ஸின் வார்த்தைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய கேப்டன் ரோகித்சர்மா அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி மிரட்டினார். உடன் மற்ற இந்திய பேட்டர்களும் அதிரடி காட்ட 205 ரன்களை குவித்துள்ளது இந்திய அணி.

7 பவுண்டரிகள் 8 சிக்சர்கள்.. 92 ரன்கள் குவித்த ரோகித் சர்மா!

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஸ் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் விராட் கோலி 0 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். 6 ரன்னுக்கு முதல் விக்கெட்டை இந்தியா இழந்தாலும் எதிர்முனையில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ரோகித் சர்மா, மிட்செல் ஸ்டார்க் வீசிய ஒரே ஓவரில் 4 சிக்சர்கள் 1 பவுண்டரி என பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினார்.

rohit sharma

தொடர்ந்து அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஹிட்மேன், பாட் கம்மின்ஸுக்கு எதிராக 100 மீட்டர் சிக்சரை பறக்கவிட்டு பந்தை ஸ்டேடியத்திற்கு வெளியே அனுப்பினார். 7 பவுண்டரிகள் 8 சிக்சர்கள் என நாலாபுறமும் சிதறடித்த ரோகித் சர்மா சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு 92 ரன்னில் ஸ்டாக் பந்தில் வெளியேறினார்.

sky

ரோகித் சர்மா வெளியேறிய பிறகு ரன்வேகத்தை கட்டுப்படுத்திய ஆஸ்திரேலியா அணி கம்பேக் கொடுத்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய பண்ட்15, சூர்யகுமார் 31, ஷிவம் துபே 28 மற்றும் ஹர்திக் பாண்டியா 27ரன்கள் என அடிக்க 20 ஓவர் முடிவில் 205 ரன்களை குவித்தது இந்திய அணி.

206 என்ற கடினமான இலக்குடன் விளையாடிவரும் ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்புக்கு 6 ரன்னுடன் முதல் ஓவரை முடித்துள்ளது. இருப்பினும், அதன்பிறகு கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் இந்திய பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தனர்.

அர்ஸ்தீப் வீசிய மூன்றாவது ஓவரில் இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்ஸர், பும்ரா வீசிய நான்காவது ஓவரில் மூன்று பவுண்டரிகள், அக்‌ஷர் வீசிய ஐந்தாவது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி, ஹர்திக் வீசிய 6வது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் விளாசப்பட்டது. பவர் பிளே முடிவில் ஆஸ்திரேலியா 65 ரன்கள் குவித்தது. மிட்செல் மார்ஷ் 31 (18), டிராவிஸ் ஹெட் 26 (12) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.