ind a - pak a web
T20

வெளியே போவென சைகை காட்டிய பாக். பவுலர்.. முறைத்த அபிஷேக் சர்மா! அனல்பறக்கும் IND A - PAK A ஆட்டம்!

2024 வளர்ந்துவரும் வீரர்களுக்கான டி20 ஆசியக்கோப்பை தொடரானது நடந்துவருகிறது, அதில் இந்தியா ஏ-பாகிஸ்தான் ஏ அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

Rishan Vengai

2024 ஆடவர் வளர்ந்துவரும் வீரர்களுக்கான டி20 ஆசியக்கோப்பை தொடரானது, 18-ம் தேதி தொடங்கி அக்டோபர் 27-ம் தேதிவரை மொத்தம் 10 நாட்கள் நடைபெறுகிறது.

இதுவரை 50 ஓவர்கள் கொண்ட தொடராகவே நடத்தப்பட்ட நிலையில், நடப்பாண்டுக்கான வளர்ந்துவரும் வீரர்களுக்கான ஆசியக்கோப்பை தொடரானது டி20 போட்டிகள் கொண்ட தொடராக முதல்முறையாக நடத்தப்படுகிறது.

men's t20 emerging asia cup

இந்த தொடரில் 8 ஆசிய அணிகளான “இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ, இலங்கை ஏ, வங்கதேசம் ஏ, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஹாங்காங் மற்றும் ஆப்கானிஸ்தான்” முதலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டிருக்கும் பிரிவில் நான்கு-நான்கு அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் ஏ-ல் “ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங் மற்றும் இலங்கை” அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் பி-ல் “இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ மற்றும் ஓமன்” முதலிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு பிரிவில் இருக்கும் 4 அணிகளில் ஒவ்வொரு அணி, மற்ற அணிகளை எதிர்கொண்டு மூன்று குரூப் போட்டிகளில் மோதும். இதில் பட்டியலில் முதலிரண்டு இடம் பிடிக்கும் நான்கு அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்து இறுதிப்போட்டியில் பங்கேற்பார்கள்.

விக்கெட்டுக்கு பிறகு சைகை காட்டிய பாகிஸ்தான் பவுலர்..

ஓமனில் தொடங்கியிருக்கும் 2024 ஆடவர் வளர்ந்துவரும் வீரர்களுக்கான ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நவம்பர் 19-ம் தேதியான இன்று பலப்பரீட்சை நடத்திவருகின்றன.

பரபரப்பான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்துவருகிறது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா மற்றும் பிரப்சிம்ரன் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். பவர்பிளேவை சரியாக பயன்படுத்திக்கொண்ட இந்த ஜோடி 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 68 ரன்களை குவித்து மிரட்டியது.

ஆனால் பவர்பிளே முடிந்து பாகிஸ்தான் பவுலர் சுபியான் முகீம் வீசிய அடுத்த பந்திலேயே இறங்கிவந்து அடிக்க முயன்ற அபிஷேக் சர்மா கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது விக்கெட் எடுத்தபிறகு வெளியே போ என அபிஷேக் சர்மாவை பார்த்து கத்திக்கொண்டே சொன்னார் சுபியான் முகீம், அதைப்பார்த்த அபிஷேக் சர்மா முறைத்துகொண்டு நிற்க அம்பயர் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 35 ரன்களடித்த அபிஷேக் வெளியேறியது, மறுமுனையில் இருந்த பிரப்சிம்ரனும் 19 பந்தில் 3 பவுண்டரி 3 சிக்சர் உட்பட 36 ரன்னடித்த பிறகு வெளியேறினார். விக்கெட்டை இழந்த பிறகு இந்திய அணி ரன்களை எடுத்துவர முடியாமல் தடுமாறியது. நேஹல் வதேரா அதிரடியாக விளையாட முயற்சித்து 25 ரன்னிலும், ஆயுஸ் பதோனி 3 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.

என்ன தான் விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும் நிதானமாக விளையாடி களத்தில் நின்ற கேப்டன் திலக் வர்மா 2 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விளாசி 44 ரன்கள் அடிக்க, இறுதியாக வந்து அதிரடியாக விளையாடிய ரமன்தீப் சிங் அவருடைய பங்கிற்கு சிக்சர் பவுண்டரி என விரட்டினார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்துள்ளது.

இந்தியா ஏ அணி: அபிஷேக் சர்மா, பிரப்சிம்ரன் சிங் (wk), ரமன்தீப் சிங், அன்ஷுல் கம்போஜ், திலக் வர்மா (கேப்டன்), ஆயுஷ் பதோனி, நேஹல் வதேரா, நிஷாந்த் சிந்து, ராகுல் சாஹர், ரசிக் தார் சலாம், வைபவ் அரோரா