யஷஸ்வி ஜெய்ஸ்வால் web
T20

’அவரை விட்டுவிட்டு இடது கை பவுலர்களிடம் சிக்கிக்கொள்ளாதீர்கள்..’- ஜெய்ஸ்வாலுக்கு WI ஜாம்பவான் ஆதரவு!

இந்திய அணியில் தொடக்க வீரராக யார் விளையாடவேண்டும் என்ற கேள்விக்கு மட்டும் இன்னும் நிரந்த பதில் கிடைக்காமல் இருந்து வருகிறது.

Rishan Vengai

இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கான இடம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. அறிக்கைகளின்படி, இன்றைய அயர்லாந்திற்கு எதிரான போட்டியில், தொடக்கவீரர்களாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி தான் விளையாடவிருக்கின்றனர். ஜெய்ஸ்வால் அவருடைய வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டிய நிலையே இருந்து வருகிறது.

ஐபிஎல் தொடருக்கு முன்புவரை அபாரமான ஃபார்மில் ஜொலித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராஜஸ்தான் அணிக்காக விளையாடியபோது தன்னுடைய பேட்டிங் ஃபார்மை இழந்து தடுமாறினார். பின்னர் தொடரின் நடுப்பகுதியில் மீண்டும் ஃபார்மிற்கு திரும்பினாலும், அவரால் சரியாக முடிக்க முடியவில்லை.

jaiswal

இந்நிலையில் ஜெய்ஸ்வாலின் சுமாரான ஃபார்மின் காரணமாக அணியில் கூடுதல் ஆல்ரவுண்டரைப் பொருத்துவதே சரியானதாக இருக்கும் என்ற இடத்திற்கு இந்திய அணி சென்றுள்ளது. ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் அணிக்குள் இருக்கும் வாய்ப்பை பெறும் நிலையில் இருந்து வருகின்றனர்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் சரியான தேர்வாக இருப்பார்!

இந்திய அணியில் ஜெய்ஸ்வாலுக்கு இடம் இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி இருந்துவரும் நிலையில், முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் இயன் பிஷப், இந்திய அணி ஜெய்ஸ்வாலை தொடக்கவீரராக விளையாட வைக்கவேண்டும் என விரும்புகிறார். தற்போது இருக்கும் ஃபார்மே இந்திய அணியில் இடம்பிடிக்க போதுமானது என்று கூறியுள்ளார்.

ஜெய்ஸ்வால் குறித்து பேசியிருக்கும் அவர், “ஐபிஎல்லில் ஜெய்ஸ்வாலின் ஃபார்ம் கொஞ்சம் கவலை தருவதாகதான் இருந்தது. ஆனால், அவரது ஃபார்ம் அணியில் இருப்பதற்கு போதுமானது என்று நினைத்துதான் எடுத்தீர்கள் என்றால், ஜெய்ஸ்வால் தொடக்கவீரராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

Yashasvi Jaiswal

ஜெய்ஸ்வால் ஆடும் XI-ல் இருந்தால், அவர் ஃபார்மிற்கு திரும்பும்போது அணிக்குள் தரத்தை கொண்டு வருவார், குறிப்பாக அவர் ஒரு இடதுகை வீரர் என்பது கூடுதல் பலம். அவர் அணிக்குள் இருந்தால் நீங்கள் எதிரணியின் பந்துவீச்சைப் பற்றி வெவ்வேறு கேள்விகளைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை” என்று பிஷப் கூறியதாக என்டிடிவி மேற்கோளிட்டுள்ளது.