dhoni, virat twitter
T20

CSK Vs RCB| கை கொடுக்க காத்திருந்த தோனி.. கண்டுகொள்ளாத RCB வீரர்கள்.. தேடிச் சென்ற விராட் கோலி!

Prakash J

நடப்பு ஐபிஎல் தொடர் லீக் சுற்றுப் போட்டிகள் முடிந்து பிளே ஆஃப் சுற்று எனும் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளான சென்னை அணி, பெங்களூருவிடம் தோல்வி அடைந்ததால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறி இருப்பது, அவ்வணி ரசிகர்களைப் பெரும் ஏமாற்றத்திற்குள்ளாக்கியது. இந்த நிலையில், அன்றைய போட்டியில் வெற்றிபெற்ற பெங்களூரு அணி வீரர்கள், தாங்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டதைக் கொண்டாடினர்.

பொதுவாக, போட்டி முடிந்தவுடன் ஒரு நிமிடம் இந்தக் கொண்டாட்டம் இருக்கும். அதன்பின் எதிரணி வீரர்களுக்கு கை கொடுக்க வருவார்கள். ஆனால் இந்தப் போட்டியின் முடிவில் சுமார் மூன்று நிமிடங்களுக்கும் மேலாக ஆர்சிபி வீரர்கள் மைதானத்தின் மத்தியில் நின்று வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

இதையும் படிக்க:கர்நாடகா| ஓடும் பைக்கில் எல்லை மீறிய காதல் ஜோடி.. வைரலால் வலைவீசிய போலீஸ்! #ViralVideo

அப்போது, சிஎஸ்கே அணியினர் வரிசையாக நின்று கைகுலுக்கக் காத்திருந்தனர். தோனி முதல் நபராக வரிசையில் நின்று இருந்தார். ஆனால், ஆர்சிபி வீரர்கள் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. சில நிமிடங்கள் காத்திருந்தபின், தோனி மைதானத்தைவிட்டு வெளியேறிச் சென்றார். வெளியேறி சென்றபோதுகூட, அங்கே நின்றிருந்த ஆர்சிபி அணியின் உதவியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு அவர் கைகுலுக்கிய பின்னரே ஓய்வறைக்குச் சென்றார். இதுகுறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், ”ஆர்சிபி அணியினர் தோனிக்கு அவமரியாதை செய்துவிட்டனர்” எனத் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த விஷயம் தெரியாமல் ஆர்சிபி ரசிகர்கள் பலரும், தோனி தங்கள் அணியை அவமதித்துவிட்டதாக அவர்மீது குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆனால், இந்தப் பண்பை நன்கறிந்த விராட் கோலி, வெற்றிக் கொண்டாட்டத்திற்குப் பிறகு தோனியின் ட்ரெஸ்ஸிங் ரூமுக்குச் சென்று கைகுலுக்கிவிட்டு வந்தார். இதைப் பலரும் பெருமையாகப் பேசி வருகின்றனர்.

இதையும் படிக்க: Definitely Not..?' |ஓய்வு குறித்து சஸ்பென்ஸ் வைத்துச் சென்ற தோனி.. CSK நிர்வாகிகளிடம் சொன்னது என்ன?