rohit sharma - virat kohli cricinfo
T20

“விராட்டோ ரோகித்தோ இல்லை.. IND-ன் மேட்ச் வின்னர் அவர்தான்..” - ஹர்பஜன் சொல்லும் வீரர் யார் தெரியுமா?

Rishan Vengai

2024 டி20 உலகக்கோப்பையானது பரபரப்பான மோதல்களுக்கு பிறகு சூப்பர் 8 சுற்றை நோக்கி நகர்ந்துள்ளது. 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெற்ற நிலையில், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா, இங்கிலாந்து முதலிய 7 அணிகள் சூப்பர் 8 சுற்றில் தங்களுடைய இடத்தை உறுதிசெய்துள்ளன.

மீதமுள்ள ஒரு இடத்திற்கு வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே மோதல் இருந்துவருகிறது. துரதிருஷ்டவசமாக சாம்பியன் அணிகளான பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை முதலிய அணிகள் உலகக்கோப்பை தொடரிலிருந்தே வெளியேறியுள்ளன.

bumrah

இந்திய அணியை பொறுத்தவரையில், பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா மேட்ச் வின்னராக ஜொலித்துள்ளார். பேட்டிங்கை பொறுத்தவரையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி சொதப்பிவரும் நிலையில், ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் இருவரும் அரைசதத்தை பதிவுசெய்துள்ளனர். அதேபோல ரிஷப் பண்ட் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு மேட்ச் வின்னிங் ஆட்டத்தை விளையாடி அசத்தினார்.

pant

சூப்பர் 8 சுற்றுக்கு செல்வதற்கு முன் அணியில் இருக்கும் தவறுகளை எல்லாம் சரிசெய்து வலுவான அணியாக கம்பேக் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துவரும் நிலையில், இந்திய அணியின் மேட்ச் வின்னர் யார் என்பது குறித்து ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.

அவரின் பேட்டிலிருந்து ரன்கள் வருவது முக்கியம்..

இந்திய அணியின் மேட்ச் வின்னர் குறித்து பேசியிருக்கும் ஹர்பஜன் சிங், “ஒரு போட்டியை வெல்லவேண்டுமானால் நாம் எப்போதும் மேட்ச் வின்னர்களைப் பற்றி பேசுகிறோம். இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மிகப்பெரிய மேட்ச் வின்னர் என்று நான் உணர்கிறேன். ஏனெனில் அவர் விளையாடும் நாளில், அவர் போட்டியை வெல்வது மட்டுமல்லாமல், எதிரணியின் கைகளிலிருக்கும் போட்டியை கூட வெகு தொலைவில் கொண்டு சென்றுவிடுவார். அவருடைய ஆட்டத்தை பார்க்கும் எதிரணியால் இனி ஆட்டத்தை வெல்ல முடியும் என்று நினைக்க கூட முடியாது” என்று சூர்யகுமார் யாதவின் முக்கியத்துவத்தை கூறினார்.

suryakumar

மேலும் "சூர்யகுமார் ஒரு ஸ்பெஷல் பிளேயர். அமெரிக்காவிற்கு எதிராக அவருடைய பேட்டில் இருந்து ரன்கள் வந்தது இந்திய அணிக்கு மிகவும் நல்லது. ஏனென்றால் அந்த ரன்கள் வரவில்லை என்றால், அது இந்தியாவிற்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியிருக்கலாம். தற்போது அவரை போன்ற ஒரு வீரரின் பேட்டில் இருந்து ரன்கள் வருவது, இந்தியாவிற்கு நல்ல அறிகுறியாக மாறியுள்ளது" என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் கூறியுள்ளார்.