2025 ipl auction web
T20

2 நாட்கள்.. 577 வீரர்கள்.. களைகட்டவிருக்கும் IPL ஏலம்! சந்தேகங்களை தீர்க்கும் A - Z விவரங்கள்!

2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலாம் இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் நடைபெறவிருக்கிறது.

Rishan Vengai

அனைத்து ஐபிஎல் ரசிகர்களும் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஆக்சன் நவம்பர் 24 மற்றும் நவம்பர் 25 தேதிகளான இன்று மற்றும் நாளை நடைபெறவிருக்கிறது.

ipl auction

ஏலத்தை பார்க்க செல்வதற்கு முன் தெரியவேண்டிய தகவல்கள் மற்றும் இருக்கக்கூடிய சந்தேகங்களுக்கான புரிதலை பார்க்கலாம்.

எங்கு நடக்கிறது? நேரம் என்ன?

2025 ஐபிஎல் மெகா ஏலமானது சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள அபாடி அல்-ஜோஹர் அரங்கில் நடைபெறவுள்ளது. இது இந்திய நேரப்படி மதியம் 2.30 மணியளவில் தொடங்கப்படவிருக்கிறது.

எதில் நேரலையை பார்க்கலாம்?

இந்தியன் பிரீமியர் லீக் 2025 மெகா ஏலமானது டிவியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், டிஜிட்டலில் ஜியோ சினிமா ஆப் மற்றும் வெப்சைட்டில் நேரடி ஸ்ட்ரீமிங்கில் கிடைக்கிறது.

எத்தனை வீரர்கள் பங்கேற்றுள்ளனர்?

ஆரம்பத்தில் மொத்தம் 574 வீரர்கள் பதிவுசெய்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் இங்கிலாந்தின் நட்சத்திர பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சர், அமெரிக்க வேகப்பந்து வீச்சாளர் சவுரப் நேத்ரவல்கர் மற்றும் மும்பை விக்கெட் கீப்பர் ஹர்திக் தாமோர் ஆகியோர் ஏலத்தில் நுழைந்துள்ளனர்.

இதன்படி மொத்தம் 577 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க உள்ளனர். இந்திய வீரர்கள் 367 பேரும், வெளிநாட்டு வீரர்கள் 210 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

முதல்நாளில் எத்தனை வீரர்கள் பங்கேற்கின்றனர்?

ஏலத்தில் பங்கேற்கும் வீரர் எண் 116 வரை முதல் நாளிலும், வீரர் எண் 117லிருந்து இரண்டாவது நாளிலும் பங்கேற்க உள்ளனர்.

எத்தனை RTM கார்டுகள் மீதமுள்ளன?

ஒவ்வொரு அணிக்கும் 6 RTM கார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே 46 ஆர்டிஎம்கள் அனைத்து அணிகளாலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மீதமுள்ள 14 RTMகளில்,

KKR, RR - 0

CSK, MI, SRH, LSG, GT - 1

டெல்லி கேபிடல்ஸ் - 2

ஆர்சிபி - 3

பஞ்சாப் கிங்ஸ் - 4

ஒவ்வொரு அணியிலும் இருக்கும் பர்ஸ் தொகை?

பஞ்சாப் கிங்ஸ் - ரூ 110.5 கோடி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ரூ 83 கோடி

டெல்லி கேப்பிட்டல்ஸ் - ரூ 73 கோடி

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ரூ 69 கோடி

குஜராத் டைட்டன்ஸ் - ரூ 69 கோடி

ஆர்சிபி, சிஎஸ்கே

சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ 55 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ 51 கோடி

மும்பை இந்தியன்ஸ் - ரூ 45 கோடி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 45 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ 41 கோடி

பங்கேற்கவிருக்கும் சூப்பர் ஸ்டார் வீரர்கள்?

2 கோடி தொகைக்கான பட்டியலில் மொத்தம் 81 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதில் ஏலத்தை சுவாரசியமாக மாற்றக்கூடிய பல சூப்பர் ஸ்டார் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அவற்றில் சில வீரர்களின் பெயர்களை இதில் பார்க்கலாம்.

முகமது ஷமி

இந்திய வீரர்கள்: ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், இஷான் கிஷன், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், ரவிச்சந்திரன் அஸ்வின், வெங்கடேஷ் ஐயர், தேவ்தத் படிக்கல், ஹர்ஷல் பட்டேல், நடராஜன், பிரசித் கிருஷ்னா, ஆவேஷ் கான், க்ருணால் பாண்டியா, வாசிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், முகேஷ் குமார், உமேஷ் யாதவ்.

ஜோஸ் பட்லர்

வெளிநாட்டு வீரர்கள்: ஜோஸ் பட்லர், ககிஷோ ரபாடா, மிட்செல் ஸ்டார்க், லியாம் லிவிங்ஸ்டன், டெவான் கான்வே, ஹாரி ப்ரூக், ஜேக் ப்ரேசர் மெக்கர்க், எய்டன் மார்க்ரம், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஸ், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டொய்னிஸ், ஜானி பேர்ஸ்டோவ், குயிண்டன் டிகாக், ரஹ்மனுல்லா குர்பாஸ், பில்ப் சால்ட், ஹசல்வுட், ஆன்ரிக் நார்ஜே, நூர் அகமது, வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்‌ஷனா, ஆடம் ஷாம்பா, ஃபேஃப் டூபிளசி, க்ளென் பிலிப்ஸ், சாம் கரன், கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், ஜோஸ் இங்கிலிஸ், லாக்கி பெர்குசன், முஜீப் உர் ரஹ்மான், மொயின் அலி, வில் ஜாக்ஸ், டிம் டேவிட், முஷ்தஃபிசூர் ரஹ்மான், நவீன் உல் ஹக், எவின் லெவிஸ், ஸ்டீவ் ஸ்மித் , கஸ் அட்கின்ஸன், மிட்செல் சாண்ட்னர், மாட் ஹென்ரி, அல்சாரி ஜோசப், ரஸ்ஸி வேண்டர் டஸ்ஸன், ஜோஃப்ரா ஆர்ச்சர் , ஜேசன் ஹொல்டர், ஃபசல் ஃபரூக்

2025 ஐபிஎல் எப்போது தொடங்குகிறது?

இந்தியன் பிரீமியர் லீக்கின் அடுத்த சீசன் மார்ச் 14, 2025 அன்று தொடங்கும், அதன் இறுதிப்போட்டி மே 25 அன்று நடைபெறும் என தெரிகிறது.