pakistan x page
T20

T20 WC | வெளியேறிய பாகிஸ்தான்.. நாடு திரும்ப அச்சம்.. ஒரு மாதத்திற்கு எஸ்கேப் ஆகும் 5 வீரர்கள்!

கேப்டன் பாபர் அசாம், இமான் வாசிம், அசாம் கான், சதாப் கான் மற்றும் ஹாரிஸ் ரௌப் ஆகிய ஐந்து வீரர்கள் மட்டும் பாகிஸ்தானுக்கு செல்லப் போவதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Prakash J

20 அணிகள் பங்கேற்ற விளையாடிய டி20 உலகக்கோப்பை தொடரில் அடுத்த சுற்றுக்கு 8 அணிகள் தகுதி பெற்றுள்ளன. முன்னதாக, சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத பாகிஸ்தான் அணி, தொடரிலிருந்து வெளியேறியது. இதனால், அவ்வணி மீது நிறைய விமர்சனம் கிளம்பியுள்ளது. குறிப்பாக, அவ்வணியின் பயிற்சியாளரான கேரி கிறிஸ்டனேவே அணியை கடுமையாக சாடியிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்பாக, கேப்டன் பாபர் அசாம், இமான் வாசிம், அசாம் கான், சதாப் கான் மற்றும் ஹாரிஸ் ரௌப் ஆகியோர் மீது கடுமையான விமர்சனம் எழுந்தது. இதனால் அவர்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய பிறகு, பாகிஸ்தான் வீரர்கள் உடனடியாக தங்கள் நாடு செல்லத் தயாராகிவிட்டனர்.

ஆனால், கேப்டன் பாபர் அசாம், இமான் வாசிம், அசாம் கான், சதாப் கான் மற்றும் ஹாரிஸ் ரௌப் ஆகிய ஐந்து வீரர்கள் மட்டும் பாகிஸ்தானுக்கு செல்லப் போவதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் லண்டனுக்கு சுற்றுலா செல்ல உள்ளதாகவும் அல்லது அமெரிக்காவிலேயே இன்னும் ஒரு மாதத்திற்கு தங்கியிருக்கப் போகிறார்கள் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதையும் படிக்க: நீட் தேர்வு|குவியும் முறைகேடு புகார்கள்; விசாரணையில் வெளிவரும் புது தகவல்கள்.. அமைச்சர் சொன்ன பதில்!

உலகக்கோப்பை தோல்விக்குப் பின் நாடு திரும்பினால் கடுமையான எதிர்வினைகளைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்பதாலேயே அவர்கள் இத்தகைய முடிவுகளை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இன்னும் ஒரு மாதத்திற்கு அவர்கள் எந்தத் தொடரிலும் விளையாடுவதற்கான அட்டவணை இல்லை. ஆகஸ்ட் மாதம்தான் வங்கதேசத்தோடு டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது அந்த அணி.

அதனால், அதுவரை அமெரிக்கா அல்லது இங்கிலாந்தில் விடுமுறையை அவர்கள் கழிக்க முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், தலைமைப் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் மற்றும் உதவிப் பயிற்சியாளர் அசார் மஹ்மூத் ஆகியோர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். விரைவில், இப்பிரச்னைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு எதிர்வினையாற்றும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்க: தொடரும் சம்பவங்கள்| உணவில் பிளேடு.. உறுதிசெய்து இழப்பீடு வழங்கிய ஏர் இந்தியா.. நிராகரித்த பயணி!