moeen ali - philip salt - buttler - will jacks pt
T20

RCB, CSK, KKR, RR அணிகளுக்கு விழுந்த மிகப்பெரிய அடி..! இந்தியாவை விட்டு வெளியேறும் அதிரடி வீரர்கள்

Rishan Vengai

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எடுத்திருக்கும் முக்கிய முடிவால், RCB, CSK, KKR, RR முதலிய நான்கு அணிகளும் அவர்களுடைய முக்கியமான வீரர்களை இழக்கவுள்ளனர்.

நடப்பு ஐபிஎல் தொடர் வரும் மே 26-ம் தேதி முடிவடையும் நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரானது ஜுன் 2ம் தேதி தொடங்கி நடைபெறவிருக்கிறது. ஐபிஎல்லை விட உலகக்கோப்பை முக்கியம் என்பதால் தங்களுடைய அணி வீரர்களை நாட்டிற்கும் திரும்படி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

Jos Buttler

கிறிக்இன்ஃபோ வெளியிட்டிருக்கும் செய்தியின் படி, ‘ஜோஸ் பட்லர், வில் ஜாக்ஸ், பிலிப் சால்ட், மொயின் அலி உள்ளிட்ட அனைத்து இங்கிலாந்து வீரர்களும் சொந்த நாட்டுக்கு திரும்பவும்’ என இங்கிலாந்து வாரியம் கூறியுள்ளதாக தெரிகிறது.

பேர்ஸ்டோ

அதன்படி ‘டெல்லி அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு வில் ஜாக்ஸ் மற்றும் ரீஸ் டாப்லி லண்டன் திரும்பினர். ஜோஸ் பட்லர் கடந்த புதன்கிழமை வெளியேறினார். மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ், சாம் குர்ரான் மற்றும் பில் சால்ட் முதலிய மற்ற வீரர்கள் இந்த வாரம் இந்தியாவை விட்டு வெளியேறுவார்கள்’ என்றும் கூறப்பட்டுள்ளது.

எந்த அணிகளுக்கு எல்லாம் பிரச்னை இருக்கப்போகிறது?

கொல்கத்தா - ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கள் இன்னும் தொடங்காத நிலையில், கொல்கத்தா அணியின் ஸ்டார் வீரர் பிலிப் சால்ட் வெளியேறவுள்ளது அந்த அணிக்கு பெரிய பாதகமாக அமைந்துள்ளது.

பிலிப் சால்ட்

ராஜஸ்தான் - அதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தனியாளாக வெற்றிக்கு அழைத்துச்சென்ற ஜோஸ் பட்லர் வெளியேறவுள்ளது, அந்த அணிக்கு பெரிய அடியாக விழுந்துள்ளது. ஏற்கெனவே 3 போட்டிகளில் தோற்று வெற்றிக்காக போராடிவரும் ராஜஸ்தான் அணி, பெரிய அழுத்தத்தை சந்திக்க உள்ளது.

ஜோஸ் பட்லர்

சென்னை சூப்பர் கிங்ஸ் - சிஎஸ்கே அணியை பொறுத்தவரையில் ஏற்கனவே பேட்டிங்கில் ருதுராஜ் மட்டுமே சிறப்பாக செயல்பட்டுவரும் நிலையில், மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்பட்ட மொயின் அலி இல்லாமல் போவது பெரிய பாதகமாக அமைய வாய்ப்புள்ளது. மொயின் அலி வெளியேறினால் மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்படவேண்டிய அழுத்தம் துபேவுக்கு ஏற்படும்.

மொயின் அலி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - இந்த அனைத்து அணிகளை விடவும் ஆர்சிபி அணிக்கு மட்டுமே பெரிய பாதகமான சூழல் ஏற்படவுள்ளது. வில் ஜாக்ஸ் அணிக்குள் வந்த பிறகு சிறப்பாக செயல்பட்டுவரும் அந்த அணி, 3வது இடத்தில் களமிறங்கி சிறப்பாக செயல்பட்ட வில் ஜாக்ஸ் இல்லாமல் என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. வில் ஜாக்ஸ் இல்லாத நிலையில், மீண்டும் மேக்ஸ்வெல்லிடம் மட்டுமே செல்லவேண்டிய சூழல் ஆர்சிபி அணிக்கு ஏற்படும்.

வில் ஜாக்ஸ்

இந்த முக்கியமான வீரர்கள் இல்லாதது ஐபிஎல் அணிகளுக்கு பாதகம் என்பதைவிடவும், இந்த ஸ்டார் வீரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இங்கிலாந்து அணிக்கு விளையாடபோகிறார்கள் என்பது இந்திய ரசிகர்களை கொஞ்சம் கலக்கத்தில்தான் தள்ளியுள்ளது.