bravo x
T20

“பவுலர்கள் தங்கள் மீது நம்பிக்கை வைப்பதில்லை;அதனால்தான் CSK-வில் மாற்றத்தை செய்து வருகிறேன்"- பிராவோ

டி20 கிரிக்கெட் என்பது பேட்ஸ்மேன்களுக்கான போட்டியாக பார்க்கப்படும் நிலையில், பவுலர்கள் தங்கள் திறமைகள் மீது நம்பிக்கை வைப்பதில்லை என சிஎஸ்கே அணியின் பவுலிங் கோச் டிவைன் பிராவோ கூறியுள்ளார்.

Rishan Vengai

20 ஓவர்கள் கொண்ட டி20 வடிவ கிரிக்கெட் என்பது 2007-ல் தொடங்கப்பட்டபோதே, அது பந்துவீச்சாளர்களின் உரிமையை பறிக்கிறது என்றும், இதனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் வடிவம் பெரிதாக பாதிக்கப்படும் என்ற அபாய குரல் எழுப்பப்பட்டது.

ஆனால் அதிரடியான பேட்டிங், எதிர்பாராத விதத்தில் மாறும் கடைசிநேர த்ரில்லர் மற்றும் விரைவான முடிவுகள் என டி20 கிரிக்கெட், ரசிகர்களின் அதிகப்படியான வரவேற்பை பெற்றுள்ளது.

2023 IPL

என்னதான் ரசிகர்களிடையே அதிகப்படியான வரவேற்பை பெற்றிருந்தாலும், பந்துவீச்சாளர்களை டாமினேட் செய்துவரும் டி20 வடிவமானது பேட்ஸ்மேன்களின் ஆதிக்க வடிவமாக மாறிவருகிறது.

அதிலும் இம்பேக்ட் வீரர் விதிமுறை என்ற புதிய ரூல் ஐபிஎல் தொடரில் அறிமுகம் ஆனதில் இருந்து, 12 பேட்ஸ்மேன்கள் விளையாடும் நிலை எட்டியுள்ளதால் வீரர்கள் விக்கெட் விழுமோ என்ற அழுத்தம் இல்லாமல் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வருகின்றனர். இதனால் பந்துவீச்சாளர்களிடையே அழுத்தமும், பயமும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.

பவுலர்கள் தங்கள் மீது நம்பிக்கை வைப்பதில்லை..

டி20 வடிவத்திலும், ஐபிஎல்லிலும் பவுலர்கள் பந்துவீசுவதில் சிரமத்தை எதிர்கொண்டுவருவது குறித்து பேசியிருக்கும் டிவைன் பிராவோ, பவுலர்கள் தங்கள் திறமை மீது நம்பிக்கை வைப்பதில்லை என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியிருக்கும் பிராவோ, “டி20களில் பந்துவீச்சாளர்கள் சிரமப்படுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், தங்களால் யார்க்கர்கள் வீசமுடியும் என்ற திறமையை அவர்கள் நம்பவில்லை. அதனால்தான் வீரர்கள் அதிகப்படியான அழுத்தத்திற்கு செல்கின்றனர்” என்று கூறியுள்ளார்.

மேலும் சிஎஸ்கே அதனை உடைக்கும் விதமாக செயல்பட்டு வருவதாக கூறியிருக்கும் பிராவோ, ” சிஎஸ்கே அணியில் இருக்கும் அனைத்து பந்துவீச்சாளர்களும் யார்க்கர் பந்துவீசுவதை நாங்கள் உறுதிசெய்து வருகிறோம். ஒவ்வொரு பயிற்சியின்போதும் அனைத்து பவுலர்களும் 12 முதல் 14 யார்க்கர் பந்துகளை வீச வேண்டும் என்பதில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்" என்று பிராவோ கூறியுள்ளார்.

Matheesha Pathirana

யார்க்கர் பந்துகள் குறித்து பேசியிருக்கும் பதிரானா, “டி20 கிரிக்கெட்டில் உங்களால் யார்க்கர் பந்துகளை அதிகம் வீசாமல் தாக்குபிடிக்க முடியாது. இந்த ஃபார்மேட்டில் சிறந்து விளங்கும் மலிங்கா மற்றும் பும்ரா போன்ற வீரர்களை கவனித்தால் தெரியும், அவர்களின் பெரிய ஆயுதமாக யார்க்கர் இருந்துள்ளது” என்று கூறியுள்ளார்.