ashwin - rahul tripathi web
T20

மீண்டும் இந்திரன் சந்திரன் Combo; சென்னைக்கு வருகிறது RRR கேங்! CSK தட்டித்தூக்கிய தரமான வீரர்கள்😍

2024 ஐபிஎல் ஏலத்தில் 4 வீரர்களை தட்டித்துக்கியுள்ளது சிஎஸ்கே அணி.

Rishan Vengai

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமில்லாமல் உலக கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த 2025 ஐபிஎல் திருவிழாவிற்கான மெகா வீரர்கள் ஏலமானது இன்றும், நாளையும் ( நவம்பர் 24 - 25) என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

ஒவ்வொரு அணிக்கும் 120 கோடி ஏலத்தொகை மற்றும் 6 ஆர்டிஎம் கார்டு ஆப்சன்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், 10 ஐபிஎல் அணிகளும் அவர்களுக்கான அணியை கட்டமைக்கும் முயற்சியில் இன்று ஏலத்தில் வீரர்களை வாங்கவுள்ளனர்.

2025 ஐபிஎல் மெகா ஏலம்

367 இந்திய வீரர்கள், 210 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 577 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கும் நிலையில், பல ஸ்டார் வீரர்கள் மிகப்பெரிய ஏலத்திற்கு செல்வார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில், இன்றைய நாள் ஐபிஎல் ஏலமானது 3.30 PM மணி முதல் நடைபெற்று வருகிறது.

4 வீரர்களை தட்டித்துக்கிய சிஎஸ்கே..

2024 ஐபிஎல் ஏலத்தில் நீண்ட நேரமாக பாதிவரை ஏலத்திற்கு சென்று பின் வாங்கிய சிஎஸ்கே அணி ஒரு வீரரை கூட எடுக்காமல் இருந்தது. அப்படி யாரைத்தான்பா வாங்க போறிங்க என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில், காத்திருந்ததற்கு பலனாக

  • டெவான் கான்வே,

  • ராகுல் திருப்பாத்தி,

  • ரச்சின் ரவிந்திரா மற்றும்

  • ரவிச்சந்திரன் அஸ்வின்

என 4 பேரையும் வாங்கியுள்ளது.

டெவான் கான்வேவை ரூ.6.25 கோடிக்கும், ராகுல் திருப்பாத்தியை ரூ.3.40 கோடிக்கும், ரச்சின் ரவிந்திராவை ரூ.4 கோடிக்கும் (RTM), ரவிச்சந்திரன் அஸ்வினை ரூ.9.75 கோடிக்கும் விலைக்கு வாங்கியுள்ளது.

டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டரில் ரன்களை அடிக்கக்கூடியவர்கள் என்பதால் அவர்களுக்கான பிளேயிங் லெவனை கிட்டத்தட்ட சரிசெய்துள்ளது சிஎஸ்கே அணி.

ஹாரி ப்ரூக், எய்டன் மார்க்ரம், ஹர்சல் பட்டேல்..

ஹாரி ப்ரூக்கை 6.25 கோடிக்கும், ஜேக் பிரேசர் மெக்கர்க்கை ரூ.9 கோடிக்கும் டெல்லி கேபிடல்ஸ் கைப்பற்றியுள்ளது.

எய்டன் மார்க்ரமை அடிப்படை விலையான 2 கோடிக்கு தட்டித்துக்கியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.

ஹர்சல் பட்டேலை சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி ரூ.8 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது.

டேவிட் வார்னர், படிக்கல் UNSOLD..

ஐபிஎல் வரலாற்றில் 6565 ரன்களை அடித்திருக்கும் டேவிட் வார்னரை யாரும் வாங்க முன்வரவில்லை. டேவிட் வார்னர் மற்றும் படிக்கல் இருவரும் UNSOLD ஆக சென்றுள்ளனர்.