csk vs rcb cricinfo
T20

மூச்சுமுட்டிய சேப்பாக்கம் மைதானம்; கெத்தாக RCBயை சம்பவம் செய்த CSK! வெற்றி கணக்கை துவங்கிய ருதுராஜ்!

2024 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஆர்சிபி அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் வெற்றியை பதிவுசெய்து அசத்தியுள்ளது.

Rishan Vengai

2024 ஐபிஎல் தொடரானது பல்வேறு புதிய மாற்றங்களுடன் பரபரப்பாக தொடங்கியுள்ளது. 2024 ஐபிஎல் தொடரானது அதன் டிரேடிங்கின் போதே ”ஹர்திக் பாண்டியாவை குஜராத் அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற்றப்பட்டு” பரபரப்பான சூழலுடன் தொடங்கியது, அதற்கு பிறகு ”ரோகித் சர்மா மும்பை கேப்டன் பதவியிலிருந்து நீக்கம், 20 கோடிக்கு மேல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் ஐபிஎல் ஏலம், சுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன், ரிஷப் பண்ட் டெல்லி அணிக்கு கம்பேக் கொடுத்தது” என்று பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் பட்டியல் நீண்டுக்கொண்டே போனது.

இவ்வளவு தான் பரபரப்பு என்றால் 2024 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாளில், சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகி புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டார். இதன்மூலம் மகேந்திர சிங் தோனி, ரோகித் சர்மா, விராட் கோலி மூன்று ஜாம்பவான்களின் கேப்டன்சி பயணம் ஐபிஎல் தொடரில் முடிவுக்கு வந்துள்ளது.

MS Dhoni

எம்எஸ் தோனி தன்னுடைய ஓய்வை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் நிலையில், தோனி மற்றும் கோலி இருவரையும் ஒன்றாக பார்க்க ஐபிஎல் தொடரின் முதல்போட்டிக்கு ரசிகர்கள் சேப்பாக்கத்தில் குவிந்தனர்.

rcb vs csk

2024 ஐபிஎல் தொடரானது தொடக்கவிழாவுக்கு பிறகு, ஆர்சிபி மற்றும் சென்னை சூப்பர் சிங்ஸ் அணிகள் முதல் போட்டிக்கு மைதானத்திற்கு வந்தனர். டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபேஃப் டூ பிளெசிஸ் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

4 விக்கெட்டுகளை அள்ளி RCB-ஐ கலக்கிப்போட்ட முஸ்தஃபிசூர்!

டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தொடங்கிய விராட் கோலி மற்றும் டூபிளெசிஸ் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஒருபுறம் கோலியை நிற்கவைத்துவிட்டு மறுபுறம் அடுத்தடுத்து 8 பவுண்டரிகளை விரட்டிய டூபிளெசிஸ் அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 4 ஓவர்களுக்கு 40 ரன்களை எடுத்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்த டூபிளெசிஸை அதிகநேரம் நிலைக்கவிடாமல் 35 ரன்களில் வெளியேற்றினார் முஸ்தஃபிசூர். உடன் களமிறங்கிய ரஜத் பட்டிதார் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் இருவரும் அடுத்தடுத்து டக் அவுட்டில் வெளியேற 42 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆர்சிபி அணி.

faf

ஒருபுறம் நிலைத்து நின்ற விராட் கோலி சிக்சரடித்து அதிரடிக்கு திரும்ப, ஒரு அற்புதமான கேட்ச் மூலம் கோலியை 21 ரன்னில் வெளியேற்றினார் அஜிங்கியா ரஹானே. உடன் களத்திற்கு வந்த காம்ரான் க்ரீனை போல்டாக்கி வெளியேற்றினார் முஸ்தஃபிசூர். அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய முஸ்தஃபிசூர் அசத்த, 78 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆர்சிபி அணி.

6வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் அடித்த கார்த்திக்-அனுஜ் ஜோடி!

5 விக்கெட்டுகளை இழந்தாச்சு எப்படியும் ஆர்சிபி அணி 140 ரன்கள் மட்டுமே எடுக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 6வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த தினேஷ் கார்த்திக் மற்றும் அனுஜ் ராவத் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அனுஜ் ராவத் மற்றும் கார்த்திக் இருவரும் போட்டிப்போட்டு சிக்சர் பவுண்டரிகளாக விரட்ட 6வது விக்கெட்டுக்கு 95 ரன்களை சேர்த்தது ஆர்சிபி அணி.

anuj rawat - dinesh karthik

25 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என விரட்டிய அனுஜ் ராவத் 48 ரன்களும், 26 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என பறக்கவிட்ட தினேஷ் கார்த்திக் 38 ரன்களும் அடிக்க 20 ஓவர் முடிவில் 173 ரன்களை குவித்தது ஆர்சிபி அணி.

கேப்டனாக முதல்வெற்றியை பதிவுசெய்த ருதுராஜ்!

174 ரன்களை வெற்றி இலக்காக துரத்திய சிஎஸ்கே அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய ரச்சின் ரவிந்திரா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ருதுராஜ் கெய்க்வாட் 3 பவுண்டரிகள் அடித்து வெளியேற, ரச்சின் ரவிந்திரா 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் என பறக்கவிட்டு 35 ரன்களில் வெளியேறினார்.

rachin

அடுத்தடுத்து களத்திற்குவந்த ரஹானே மற்றும் டேரில் மிட்செல் இருவரும் இரண்டு இரண்டு சிக்சர்களாக பறக்கவிட சீரான இடைவெளியில் விக்கெட்டை விட்டாலும் இலக்கை நோக்கி விரைவாகவே நகர்ந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 5வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஷிவம் துபே மற்றும் ரவிந்திர ஜடேஜா இருவரும் இறுதிவரை நின்று ஆட்டத்தை முடித்து கொடுத்தனர். அ

ruturaj

20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக தன்னுடைய முதல் போட்டியிலேயே வெற்றியை ருசித்துள்ளார். சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக தொடர்ந்து 8 ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது சென்னை அணி. அடுத்து மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது சிஎஸ்கே.