பாகிஸ்தான் - கேரி கிர்ஸ்டன் web
T20

’என் பயிற்சியாளர் வாழ்க்கையில் இப்படிஒரு மோசமான அணியை பார்த்ததில்லை..’ PAK-ஐ விளாசிய கேரி கிர்ஸ்டன்!

Rishan Vengai

2024 டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்கா அணிக்கு எதிராக படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி, இந்தியாவுடனும் கையிலிருந்து போட்டியை கோட்டைவிட்டு தொடரிலிருந்தே வெளியேறியுள்ளது. பந்துவீச்சில் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தினாலும், பேட்டிங்கில் சொதப்பிய பாகிஸ்தான் அணி மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டுவருகின்றன.

பாகிஸ்தான் முன்னாள் வீரர்களான வாசிம் அக்ரம், ஷாகித் அஃப்ரிடி, கம்ரான் அக்மல் முதலிய வீரர்கள் 2024 டி20 உலகக்கோப்பையில் பாபர் அசாமின் கேப்டன்சி மோசமாக இருந்ததை ஒப்புக்கொண்டனர். அதேநேரம், அணிக்குள் ஒற்றுமை இல்லை என்றும், அணியில் மூன்று குழுக்கள் பிரிந்து இருப்பதாகவும், அதனால் அணித்தேர்வில் மாற்றங்கள் தேவையென்றும், புதிய அணியை உருவாக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டன.

Babar Azam

இந்நிலையில் பாகிஸ்தானின் அணியின் தற்போதைய பயிற்சியாளராக இருந்துவரும் கேரி கிறிஸ்டன், பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை என்றும், அவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இல்லையென்றும், பாகிஸ்தான் ஒரு அணியே இல்லை என்றும் கடுமையாக விமர்சித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் ஒரு அணியே இல்லை..

டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருக்கும் தகவலின் படி, 2011 ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணியை கோப்பைக்கு வழிநடத்திய பயிற்சியாளரான கேரி கிர்ஸ்டன் பாகிஸ்தானை போன்ற ஒரு அணியை பார்த்ததில்லை என்று விமர்சித்துள்ளார்.

பாகிஸ்தான் அணி குறித்து பேசியிருக்கும் கேரி கிர்ஸ்டன், “பாகிஸ்தான் அணியில் ஒற்றுமையே இல்லை. அவர்கள் அதை ஒரு அணி என்று அழைக்கிறார்கள், ஆனால் அதெல்லாம் ஒரு அணியே இல்லை. அவர்கள் ஒருவரையொருவர் ஆதரிக்கவில்லை, அனைவரும் தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளனர். நான் பல குழுக்களுடன் வேலை செய்திருக்கிறேன், ஆனால் நான் இதுபோலான ஒரு சூழ்நிலையை பார்த்ததில்லை” என்று விளாசியுள்ளார்.

shaheen afridi

மேலும், பாகிஸ்தான் அணியின் உடற்தகுதி மற்றும் போட்டியை கடைசிவரை கொண்டுசென்று முடிக்கத்தெரியாத அவார்னஸ் அனைத்தும் கடுமையாக சாடியுள்ளார்.

Shaheen Shah Afridi | Naseem Shah

இந்தியாவிற்கு எதிரான தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கூறியிருக்கும் அவர், “இந்தியாவிற்கு எதிரான ஏற்பட்ட தோல்வியென்பது படுமோசமான தோல்வி, அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தியா போன்ற ஒரு அணி 120 ரன்கள் மட்டுமே அடிக்கும் போது, அந்த ஆடுகளத்தில் அது கடினமான ஸ்கோர் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் 72 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளுடன் கையில் 7 ஓவர்கள் இருக்கும் போது, அந்த போட்டியை நிச்சயம் வென்றிருக்க வேண்டும்” என்று தன்னுடைய அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார்.