csk vs rr pt web
T20

CSK vs RR | சென்னை அசத்தல் வெற்றி... புள்ளிப்பட்டியலில் 3 ஆவது இடம்..!

Angeshwar G

நடப்பு ஐபிஎல் தொடரின் 61 ஆவது லீக் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 141 ரன்களை எடுத்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரியான் பராங் 47 ரன்களையும், துருவ் ஜூரல் 28 ரன்களையும் எடுத்தனர்.

சென்னையின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். சிமர்ஜித் சிங் 3 விக்கெட்களையும், தேஷ்பாண்டே 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

142 ரன்களுடன் இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி சிறப்பான தொடக்கத்தை அமைத்தது. அதிரடியாக ஆடிய ரச்சின் ரவீந்திரா 18 பந்துகளில் 27 ரன்களை அடித்து அசத்தினார். சற்றே அதிரடி காட்டிய மிட்செல் 22 ரன்களில் வெளியேற, பின் வந்த ஜடேஜா, துபே, மொயின் அலி என வரிசையாக வெளியேறினர். நிலையாக நின்று ஆடிய ருதுராஜ் 41 பந்துகளில் 42 ரன்களை எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

சென்னை வெற்றி!

#CSKvsRR | #CSk | #RR | #IPL | #IPLCricket2024

இறுதியில் 18.2 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட்களை மட்டுமே இழந்து 145 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் தனது 50 ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

ராஜஸ்தான் சார்பில் அஸ்வின் 2 விக்கெட்களை எடுத்திருந்தார். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி ஹைதராபாத் அணியை பின்னுக்குத் தள்ளி 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.