சச்சின் - தோனி web
T20

”தோனி இல்லையென்றால் சச்சின் உலகக்கோப்பை வெல்லாமல் ஓய்வு பெற்றிருப்பார்..”! - கனடா வீரர்

Rishan Vengai

2024 டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டுள்ள கனடா அணி, முதல் போட்டியில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 194 ரன்களை வெளிப்படுத்தி பிரம்மிக்க வைத்தது. அதேபோல அயர்லாந்து அணியை 12 ரன்னில் வீழ்த்தி கெத்துக்காட்டியது. ஆனால் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணியுடன் தோல்வியை தழுவியதால் சூப்பர் 8 செல்லும் வாய்ப்பை இழந்தது.

இந்நிலையில் இன்று கடைசி லீக் போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாடவிருக்கும் கனடா அணி, இறுதிப்போட்டியை வெற்றியுடன் முடிக்கும் முனைப்பில் களம்காணவிருக்கிறது. போட்டிக்கு முன்னதாக இந்திய வீரர்கள் குறித்தும், இந்திய கிரிக்கெட் குறித்தும் பேசிய கனடாவின் தொடக்க வீரரான ஆரோன் ஜான்சன் தோனியை புகழ்ந்து பேசியுள்ளார்.

india team

கனடாவின் தொடக்க ஆட்டக்காரராக சிறப்பாக செயல்பட்டு வரும் ஆரோன் ஜான்சன், அமெரிக்காவுக்கு எதிராக 16 பந்துகளில் 23 ரன்களும், பாகிஸ்தானுக்கு எதிராக 44 பந்துகளில் 52 ரன்களும் அடித்த நிலையில், இந்தியாவிற்கு எதிராக சிறந்த ஆட்டத்தை எதிர்ப்பார்த்துள்ளார்.

தோனி இல்லையென்றால் சச்சினுக்கு கோப்பை இல்லை..

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடன் பேசியிருக்கும் கனடா வீரர் ஆரோன் ஜான்சன், இந்திய கிரிக்கெட்டில் தோனியின் மிகப்பெரிய பங்கை பாராட்டி பேசினார்.

தோனி குறித்து பேசிய அவர், “இந்தியாவுக்கு நிறைய சிறந்த கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர், ஆனால் எம்.எஸ். தோனி அவர்கள் அனைவரை விடவும் மிகச்சிறந்தவர். சச்சின் உலகின் தலைச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்தாலும், துரதிர்ஷ்டவசமாக அவரால் கோப்பை வெல்லமுடியாமலேயே இருந்தது. ஒருவேளை தோனி இல்லாமல் போயிருந்தால், சச்சின் தன் கிரிக்கெட் வாழ்க்கையில் உலகக் கோப்பையை வெல்லாமலேயே ஓய்வு பெற்றிருப்பார்” என்று கூறியுள்ளார்.

sachin

2011-ம் ஆண்டு MS தோனியின் தலைமையில் இந்திய அணி ODI உலகக் கோப்பையை வென்றது. மும்பை வான்கடேவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோனி தனது வாழ்க்கையின் மிக முக்கியமான இன்னிங்ஸை விளையாடினார். தோனியின் தலைமையில் உலகக் கோப்பையை வெல்லும் கனவை சச்சின் டெண்டுல்கர் நிறைவேற்றினார்.