Toss Fixing Problem X
T20

’படுத்தே விட்டானய்யா..’ MI போட்டியில் ஏற்பட்ட 'Toss FIXING' பிரச்னை! கேமராமேன் செய்த தரமான சம்பவம்!

Rishan Vengai

ஐபிஎல் தொடரில் எப்போதும் சில சர்ச்சைகள் மற்றும் கலாட்டாக்கள் நடப்பது வேடிக்கையான ஒன்றாக இருக்கும். அந்தவகையில் நடப்பு ஐபிஎல் தொடரில் பரபரப்பான போட்டி முடிவுகளுக்கு இடையில், டாஸ் போடுவதில் எழுந்த பெரிய சிக்கல் ’டாஸ் ஃபிக்சிங்’ நடக்கிறதா என்ற குழப்பத்தை ஒவ்வொரு அணி கேப்டன்களுக்கும் எழுந்துள்ளது.

டாஸ் பிக்சிங் பிரச்னை எப்படி தொடங்கியது?

டாஸ் ஃபிக்சிங் என்ற மர்மமான பிரச்னை என்பது, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிய போட்டியில் தொடங்கியது. அந்த முக்கியமான போட்டியில் டாஸ் ரெஃப்ரியாக இருந்த ஜவகல் ஸ்ரீநாத், டாஸ் போடும் போது காய்னை தலைகீழாக திருப்பி பார்த்து முடிவை சொன்னதாக தகவல் வைரலாகி பெரிய பிரச்னையாக மாறியது. மும்பை அணி ஏமாற்றிவிட்டதாக சில ரசிகர்கள் குற்றஞ்சாட்டினர், அந்த போட்டியில் அடுத்தடுத்து அம்பயர்கள் செய்த தவறான முடிவுகள் ரசிகர்களை அதிருப்தியடைய செய்தது.

MI vs RCB

அதற்கு பிறகான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ் இடம் ஆர்சிபி கேப்டன் டூபிளெசிஸ், மும்பை போட்டியில் ஏற்பட்ட டாஸ் குழப்பம் குறித்து விளக்கமளித்தது வைரலாகியது.

shreyas iyer checking toss

அதனைத் தொடர்ந்து அடுத்த போட்டியில் டாஸ் போடும் போது கேகேஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், டாஸ் காய்னை குணிந்து உன்னிப்பாக பார்த்து காய்னுக்கு முத்தமிட்டதும் வைரலானது. தொடர்ந்து அடுத்தடுத்த போட்டியில் அனைத்து கேப்டன்களும் டாஸ் ரிசல்ட்டில் உன்னிப்பாக கவனம் செலுத்தினர்.

இன்றைய மும்பை போட்டியில் சம்பவம் செய்த கேமராமேன்..

மும்பை அணிக்கு எதிரான அன்றைய போட்டியில் எதற்காக ஸ்ரீநாத் காய்னை திரும்பி பார்த்தார் என்பது இன்னும் மர்மமாகவே இருந்துவருகிறது. அதுகுறித்த விளக்கம் எதுவும் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தொடர்ந்து ஒவ்வொரு அணி கேப்டன்களும் டாஸ் ரிசல்ட்டில் கவனம் செலுத்துவருகின்றனர்.

MI vs PBKS

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் மோதிய இன்றைய போட்டியில், டாஸ் ரிசல்ட்டின் போது “நீங்க என்ன பார்க்கிறது, நாங்களே காமிக்கிறோம்” என காய்னை நெருக்காமாக காட்சிபடுத்தி டிஸ்பிளே செய்தார். இந்த சம்பவத்தை பார்த்த ரசிகர்கள் “நாம ஜெயிச்சிட்டோம் மாறா” என்றும், ”படுத்தே விட்டானய்யா” என்றும் விமர்சித்துவருகின்றனர்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட்டிங் செய்துவரும் மும்பை இந்தியன்ஸ் அணி, பவர்பிளே முடிவில் ஒரு விக்கெட்டுடன் 54 ரன்கள் அடித்தது. 12 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்துள்ளது மும்பை. ரோகித் சர்மா 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் 56 ரன்களுடன் களத்தில் உள்ளார்.