rohit - bumrah X
T20

“நான் உன்னை நம்புகிறேன்.. நீ அனைத்தையும் பார்த்துக்கொள்”! ரோகித் உடனான ஆரம்பகால IPL குறித்து பும்ரா

“என்னுடைய கிரிக்கெட் பயணத்தின் தொடக்கத்தில் எனக்கு எதுவும் தெரியாது, ரோகித்திடம் கேட்டுதான் அனைத்தும் செய்வேன்” என்று பும்ரா கூறியுள்ளார்.

Rishan Vengai

தற்கால கிரிக்கெட்டின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர் என்றால், உலகத்தின் அனைத்து ஜாம்பவான் கிரிக்கெட்டர்களும் பும்ரா என்ற ஒற்றை பெயரைத்தான் குறிப்பிடுவார்கள்.

நடந்துமுடிந்த டி20 உலகக்கோப்பை பைனலில் தென்னாப்பிரிக்கா வெற்றிபெற 30 பந்துக்கு 30 ரன்களே தேவையிருந்த நிலையில், “பும்ரா வந்து பந்துவீசுங்கள், இந்தியாவை இந்த இடத்திலிருந்து வென்று கொடுங்கள்” என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பதிவிட்டார்.

Jasprit Bumrah

அதைப்போலவே கடைசி 2 ஓவர்களை வீசிய பும்ரா, தென்னாப்பிரிக்கா அணியை பின்னுக்கு தள்ளி இந்தியாவை வெற்றியின் பாதைக்கு அழைத்துச்சென்றார். எந்த இடத்திலிருந்து வேண்டுமானாலும் பும்ராவால் வெற்றியை பெற முடியும் என்ற நம்பிக்கை இந்திய ரசிகர்கள் தாண்டி உலக கிரிக்கெட்டர்களிடையேயும் சென்று சேர்ந்துள்ளது.

அந்தளவு உலக கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் பும்ரா, தொடக்க காலத்தில் இருந்த தன்னுடைய பயணம் குறித்து பேசியுள்ளார்.

உன்னை நம்புகிறேன்.. நீ அனைத்தையும் பார்த்துக்கொள்!

சமீபத்தில் நட்சத்திர வீரர் பும்ரா இந்தியன் எக்ஸ்பிரஸ் உடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் “ஆரம்பகால கிரிக்கெட்டில் எனக்கு ஒன்றுமே தெரியாது, நான் சென்று ரோகித்திடம் ‘அனைத்தையும் பார்த்துக்கொள், நான் உன்னை நம்புகிறேன்’ என்று கூறிவிடுவேன்” என தெரிவித்துள்ளார்.

rohit sharma - bumrah

ஆரம்பகால கிரிக்கெட் குறித்து பேசியிருக்கும் பும்ரா, “நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த போது, ​​எனக்கு அதிகம் தெரியாது. ஐபிஎல் விளையாடத் தொடங்கியபோது கூட, நான் சென்று ரோகித் சர்மாவிடம் 'நீங்கள் களத்தில் ஃபீல்ட் செட்டிங்கை அமைத்துவிடுங்கள், எனக்கு அமைக்க தெரியாது. நான் இந்த பந்தைதான் வீசப் போகிறேன், அதற்கேற்ற ஃபீல்டிங்கை நீங்கள் அமைத்துவிடுங்கள், நான் உங்களை நம்புகிறேன்’ என்று கூறிவிடுவேன்.

பின்னர் காலம் செல்லசெல்ல மற்றவர்களை அதிகம் சார்ந்து இருக்க முடியாது என்பதை உணர்ந்தேன், தொடர்ந்து எனக்கான ஃபீல்ட் செட்டிங்கை அமைக்க நானாகவே கற்கத் தொடங்கினேன்” என்று பும்ரா பேசியுள்ளார்.