rcb vs dc web
T20

‘RCB-க்கு அடித்த ஜாக்பாட்..’ ரிஷப் பண்ட் விளையாட தடை.. கேப்டனாக பொறுப்பேற்கும் அக்சர் பட்டேல்!

Rishan Vengai

நடப்பு 2024 ஐபிஎல் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறும் என்ற பரபரப்பான சூழல் நிலவிவருகிறது. 8 போட்டிகளில் வென்று 16 புள்ளிகளுடன் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கிட்டத்தட்ட அவர்களின் இடத்தை நிரப்பிவிட்டன.

மீதமிருக்கும் இரண்டு இடங்களுக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் முதலிய 6 அணிகளுக்கு இடையே பலத்த போட்டி நீடித்துவருகிறது.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பெரிய அடி!

எந்த இரண்டு அணிகள் கடைசி 2 இடத்தை பிடிக்கப்போகிறது என்ற சூழலில், 6 வெற்றிகளுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் டெல்லி அணி 12 புள்ளிகளுடன் ஆரோக்கியமான ஒரு இடத்தில் நீடிக்கிறது.

dc

மீதமிருக்கும் 2 போட்டிகளில் வெற்றிபெற்றுவிட்டால் பிளே ஆஃப்க்கு தகுதி பெறலாம் என்ற நிலையில், டெல்லி அணிக்கு பெரிய அடியாக கேப்டன் ரிஷப் பண்ட்க்கு அடுத்த போட்டியில் விளையாடிய பிசிசிஐ தடைவிதித்துள்ளது. அந்த அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் மெதுவாக ஓவர் வீசியதால், ஐபிஎல் நடத்தை விதியின் படி ஒரு போட்டியில் விளையாட அந்த அணி கேப்டன் ரிஷப் பண்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உடன் 30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

RCB-க்கு அடித்த ஜாக்பாட்!

தொடர்ச்சியாக 4 போட்டிகளில் வெற்றிபெற்று தரமான ஆட்டத்தை ஆடிவரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 5 வெற்றிகள் மூலம் 10 புள்ளிகளுடன் 7வது இடத்தில் நீடிக்கிறது.

RCB

இந்நிலையில் மீதமிருக்கும் 2 போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளை வீழ்த்திவிட்டால் பிளே ஆஃப்க்கு சென்று விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்துவருகிறது. இத்தகைய சூழ்நிலையில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் அணியில் இல்லாதது, அந்த அணியை எளிதில் வீழ்த்திவிடலாம் என்ற நிலைக்கு சென்று ஆர்சிபிக்கு சாதகமாக மாறியுள்ளது.

ஏனென்றால் டெல்லி அணியின் மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட் மட்டுமே சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஒருவேளை ஜேக்-பிரேசர் தொடக்கத்தில் விரைவாகவே வெளியேறினாலும் அந்த அணியை ஆர்சிபியால் எளிதில் வீழ்த்த முடியும்.

ரிஷப் பண்டுக்கு பதில் அக்சர் பட்டேல் கேப்டன்!

நாளை நடைபெறும் RCB vs DC அணிகளுக்கு இடையேயான போட்டியில் பண்ட் இல்லாத நிலையில் அக்சர் பட்டேல் கேப்டனாக வழிநடத்துவார் என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

axar patel

ரிஷப் பண்ட் குறித்து பேசியிருக்கும் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், “அக்சர் பட்டேல் நாளை எங்கள் கேப்டனாக இருப்பார். கடந்த இரண்டு சீசன்களாக அவர் எங்கள் அணியின் துணைக் கேப்டனாக இருந்துவருகிறார். ஐபிஎல் கிரிக்கெட், சர்வதேச கிரிக்கெட் இரண்டிலும் அனுபவம் வாய்ந்த வீரர், கேப்டனாக வழிநடத்த உற்சாகமாக இருக்கிறார்” என்று போட்டிக்கு முன்னதான செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.