shivam dube web
T20

“ஷிவம் துபே அணியில் வேண்டாம்..” CSK வீரருக்கு எதிராக பேசிய முன்னாள் சிஎஸ்கே வீரர்!

பாகிஸ்தான் அணிக்கு எதிராக மோசமாக விளையாடிய பிறகு, ஷிவம் துபே இந்திய அணியில் வேண்டாம் என முன்னாள் சிஎஸ்கே வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.

Rishan Vengai

2024 டி20 உலகக்கோப்பை கடந்த ஜூன் 2-ம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. குரூப் ஏ-ல் இடம்பெற்றுள்ள இந்திய அணி லீக் சுற்றில் அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகளில் விளையாடியுள்ளது.

அயர்லாந்துக்கு எதிராக 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிராக மிகைக்குறைவான டோட்டலை டிஃபண்ட் செய்து போராடி வென்றது.

shivam dube

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட், அக்சர் பட்டேல், ரோகித் சர்மா மூன்று பேட்ஸ்மேன்களை தவிர்த்து வேறு எந்த பேட்டர்களும் 100 ஸ்டிரைக்ரேட்டிற்கு மேல் விளையாடவில்லை. ஆடிய பேட்டர்களில் ஷிவம் துபே மட்டுமே 9 பந்துகளுக்கு 3 ரன்கள் என மோசமாக விளையாடி 33 ஸ்டிரைக்ரேட்டில் அவுட்டாகி வெளியேறினார்.

ஷிவம் துபேவுக்கு பதில் சஞ்சு சாம்சன்தான் இருக்கவேண்டும்..

பாகிஸ்தானுக்கு எதிராக அதிக அழுத்தத்துடன் விளையாடிய ஷிவம் துபே, அவருடைய பலம் என சொல்லப்படும் ஸ்பின்னர்களுக்கு எதிராக கூட சிறப்பாக விளையாடவில்லை. வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், ரன்களை எடுத்துவரவேண்டிய இடத்திலிருந்த ஷிவம் துபே ஸ்பின்னர்களை கூட அடிக்க முயலவில்லை. மாறாக வேகப்பந்துவீச்சாளருக்கு எதிராக அவுட்டாகி வெளியேறினார்.

இந்நிலையில் எப்போதும் சிஎஸ்கே வீரர்களுக்கு எதிராக ஒருமுறை கூட கருத்து சொல்லாத முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பத்தி ராயுடு, ஷிவம் துபே இந்திய அணியில் வேண்டாம் என்ற கருத்தை முன்வைத்தார்.

shivam dube

ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய அவர், “இந்திய அணியில் ஷிவம் துபேவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை விளையாட வைக்கவேண்டும் என நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

shivam dube

அதேபோல இன்னொரு சிஎஸ்கே வீரரான முரளிவிஜய், “5 பவுலர்களே போதும் என்ற சூழலில் ஷிவம் துபேவுக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும்.

ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா தொடக்க வீரர்களாகவும், விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் 3வது மற்றும் 4வது இடத்தில் வரும்போது இந்திய அணி இன்னும் பேலன்ஸாக இருக்கும்” என்ற கருத்தை தெரிவித்திருந்தார்.