CSK IPL/Twitter
T20

‘மற்ற அணிகள் எல்லாம் வீரர்களை தேடுகிறது... ஆனால், தோனி மட்டுமே இதனை செய்கிறார்’ - ஆகாஷ் சோப்ரா

மற்ற ஐபிஎல் அணிகள் எல்லாம் வீரர்களை தேடுவதாகவும், ஆனால், தோனி தனது தலைமையின் கீழ் வீரர்கள் வளர வாய்ப்பு அளிப்பதாகவும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

சங்கீதா

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 24-வது லீக் போட்டியில் சென்னை அணி, பெங்களூரு அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில், சென்னை அணியில் அதிகபட்சமாக கான்வே 45 பந்துகளில் 83 ரன்களும், அஜிங்யா ரஹானே 20 பந்துகளை சந்தித்து 37 ரன்களும், ஷிவம் துபே 27 பந்துகளில் 52 ரன்களும் எடுத்து அந்த அணியின் வெற்றிக்கு உதவினர்.

கட்டுரைகளை புதிய தலைமுறை ஆண்டிராய்டு செயலியில் படிக்க க்ளிக் செய்யுங்கள்..!

இந்த நிலையில், வர்ணனையாளரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான ஆகாஷ் சோப்ரா, சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி தனது தலைமையின் கீழ் வீரர்கள் வளர வாய்ப்பு அளிப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பல வீரர்கள் பேட்டிங், பௌலிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், அவர்களில் குறிப்பிடத்தக்க வீரர்களாக சென்னை அணியின் ரஹானே மற்றும் ஷிவம் துபே ஆகியோர் பேட்டிங்கில் தங்களது திறமையை காட்டி வருகின்றனர்.

ஆகாஷ் சோப்ரா

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா தனது யூ-ட்யூப் தளத்தில் பேசுகையில், “பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் அஜிங்க்யா ரஹானே களத்தில் இருந்த நேரம் வரை சிறப்பாக பேட்டிங் செய்தார். அதேபோல் ஷிவம் துபேயும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஷிவம் துபே இதற்கு முன்பு ஆர்.சி.பி. மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடியுள்ளார்.

ஆனால் தோனி தனது தலைமையின் கீழ் வீரர்கள் விளையாடும்போது அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை உருவாக்குகிறார். மாறாக மற்ற அணிகள் வீரர்களை தேடுகின்றன. தோனிக்கு கீழ் விளையாடும் வீரர்களின் செயல்பாட்டை பார்க்கும்போது மிகவும் அழகாக, மனதை கவர்வதாக உள்ளது. ஷிவம் துபேவின் கதையும் அப்படியானது தான்.

Ajinkya Rahane

மேலும், ரஹானே கடைசியாக விளையாடிய இரண்டு அல்லது மூன்று போட்டிகளை பார்த்தோமேயானால் அவரிடம் வித்தியாசத்தை நாம் காணலாம். அதுவும் அந்த புல்-ஷாட்டில் அடித்த சிக்ஸர், மிகவும் சிறப்பானது.

கான்வே அருமையான வீரர்; அதில் எந்த சந்தேகமும் இல்லை. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதுவும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் சுதந்திரமாக விளையாடினார்” என்று தெரிவித்துள்ளார்.