ind a vs afg a x
T20

Asia Cup SEMI: ’அடேங்கப்பா இது லிஸ்ட்லயே இல்லையே..’ IND A அணிக்கு எதிராக 206 ரன்களை குவித்த AFG A!

2024 வளர்ந்துவரும் வீரர்களுக்கான டி20 ஆசியக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா ஏ அணிக்கு எதிராக 206 ரன்களை குவித்தது ஆப்கானிஸ்தான் ஏ அணி.

Rishan Vengai

2024 ஆடவர் வளர்ந்துவரும் வீரர்களுக்கான டி20 ஆசியக்கோப்பை தொடரானது, 18-ம் தேதி தொடங்கி அக்டோபர் 27-ம் தேதிவரை மொத்தம் 10 நாட்கள் நடைபெற்றுவருகிறது.

இதுவரை 50 ஓவர்கள் கொண்ட தொடராகவே நடத்தப்பட்ட நிலையில், நடப்பாண்டுக்கான வளர்ந்துவரும் வீரர்களுக்கான ஆசியக்கோப்பை தொடரானது டி20 போட்டிகள் கொண்ட தொடராக முதல்முறையாக நடத்தப்பட்டுள்ளது.

men's t20 emerging asia cup

இந்த தொடரில் 8 ஆசிய அணிகளான “இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ, இலங்கை ஏ, வங்கதேசம் ஏ, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஹாங்காங் மற்றும் ஆப்கானிஸ்தான்” முதலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் சிறப்பாக செயல்பட்ட “இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ, இலங்கை ஏ, ஆப்கானிஸ்தான் ஏ” முதலிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன.

PAK A vs SL A

இந்நிலையில் அரையிறுதிப் போட்டிகள் இன்று ஓமனில் நடைபெற்றுவருகிறது. முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் ஏ அணியை வீழ்த்தி இலங்கை ஏ அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.

இந்தியா ஏ அணியை பொளந்து கட்டிய ஆப்கானிஸ்தான் ஏ அணி..

இரண்டாவது அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி எந்தவிதமான பிளானிங்கும் இல்லாமல் களத்திற்கு வந்ததுபோல் தெரிந்தது. ஆனால் இன்னைக்கு வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் பிளானுடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் ரன் வேட்டை நடத்தினர்.

ராகுல் சாஹர் ஒரே ஓவரில் 4 சிக்சர்கள் உட்பட 31 ரன்களை விட்டுக்கொடுக்க, விக்கெட்டையே இழக்காமல் 14 ஓவர் முடிவில் 137 ரன்களை குவித்தது ஆப்கானிஸ்தான் அணி. பெரும் முயற்சிக்கு பிறகு 15வது ஓவரில் முதல் விக்கெட்டை இந்திய அணி எடுத்துவந்தது. அதற்கு பிறகும் அதிரடியை நிறுத்தாத ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்களை குவித்தது.

அதிகபட்சமாக தொடக்க வீரர்களாக களமிறங்கிய செடிகுல்லா அடல் 83 ரன்கள் மற்றும் ஜுபைத் அக்பரி 64 ரன்கள் குவித்தனர்.