CSK PT
T20

முதல் 7 போட்டியில் 5 வெற்றி! ஆனால் அடுத்த 6-ல் 2 மட்டுமே! சிஎஸ்கே ஏன் ஒரே தவறை மீண்டும் செய்கிறது?!

தொடரின் தொடக்கத்தில் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் வலுவான எதிரணியாக இருந்துவந்த சென்னை சூப்பர் கிங்ஸ், தற்போது பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதிபெறுமா என்ற நிலையில் தத்தளித்துவருகிறது.

Rishan Vengai

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

ஃபீல்டிங், பவுலிங், பேட்டிங் என ஒரு ஐபிஎல் தொடருக்கு தேவையான அனைத்து கட்டங்களையும் டிக் செய்துள்ள சென்னை அணி, தொடரின் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தி வெற்றிகளாக குவித்துவந்தது. முதல்பாதியில் 7 போட்டிகளில் 5-ல் வெற்றிபெற்று வலுவான இடத்திலிருந்த சிஎஸ்கே, தற்போது அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து மோசமான ஒரு இடத்திற்கு சரிந்துள்ளது.

csk

முதலில் சென்னை அணியின் பந்துவீச்சு தான் கவலையான ஒன்றாக பார்க்கப்பட்டது, தீபக் சாஹர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் அன்-ஃபிட்டாக சென்ற போது, மஹலா, ப்ரிடோரியஸ், ஹங்கர்கேகர் என பலவீரர்களை பயன்படுத்திய சிஎஸ்கே அணி, சிறந்த பவுலிங் காம்பினேஷனை எடுத்துவர முடியாமல் தடுமாறியது. ஆனால் எப்போது பதிரானா அணிக்குள் வந்து, பதிரானா மற்றும் துஷார் தேஸ்பாண்டே இருவரும் டெத் ஓவர்களில் விக்கெட் டேக்கிங் பவுலர்களாக மாறினார்களோ, அப்போதே அந்த கவலைக்கான இடம் இல்லாமல் போனது.

Matheesha Pathirana

இந்நிலையில், பேட்டிங்கில் ஸ்டிராங்கான அணியாக ஜொலித்த சென்னை அணி, தங்களுடைய பேட்டிங் காம்பினேஷனில் தான் இப்போது சரிவை சந்தித்துள்ளது. தொடர் தோல்விகளுக்கு பேட்டிங்கில் சரிவு என்பது பெரிய காரணமாக இருந்தாலும், அதைத்தாண்டியும் சென்னை சில தவறுகளை செய்துள்ளது.

பவுலிங்கில் இருக்கும் க்ளாரிடி, பேட்டிங்கில் இல்லை!

சிறந்த பவுலிங் காம்பினேஷனை தேடிக்கொண்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பதிரானா அணிக்குள் வந்த பிறகு, ஒரு தெளிவான பவுலிங்க் லைன் அப்பை வகுத்துள்ளது. அதன்படி பதிரானா, முதல் 10 ஓவர்களுக்கு பிறகு தான் பந்துவீசவே வருகிறார். தீபக் சாஹர் பவர்ப்ளேவில் விக்கெட் எடுக்கும் பொறுப்பை பார்த்துகொள்கிறார். மிடில் ஓவரில் ஸ்பின்னர்கள் தங்களது வேலையை சரியாக செய்கின்றனர்.

Tushar Deshpande

ஆனால் பவுலிங்கில் ஒரு தெளிவு இருப்பதை போல் பேட்டிங்கில் இல்லாமல் இருப்பது நன்றாகவே தெரிகிறது. கடந்த ஆண்டுகளை சிஎஸ்கே அணியின் பேட்டிங் லைன்-அப்பை பார்த்தால், மொயின் அலி நம்பர் 3 பொசிசனில் சிறப்பான ஒரு பேட்டிங்கை விளையாடியிருக்கிறார். இந்த தொடரிலும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 3ஆவது இடத்தில் இறங்கிய போது, 4 பவுண்டரிகள், 1 சிக்சரை அடித்து 23 ரன்களை அடித்திருந்தார். ஆனால், அதற்கு பிறகான போட்டிகளில் அவருடைய ரோல் என்ன என்பதே தெரியாமல் இருக்கிறது.

அஜிங்யா ரஹானே வந்து நம்பர் 3 பொசிசனில் சிறப்பாக விளையாடினாலும், ஒரு வீரர் ஏற்கனவே அந்த வேலையை சிறப்பாக தானே செய்திருந்தார் எதற்காக அவரை மாற்ற வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. மொயின் அலி மற்றும் அம்பதி ராயுடு என்ற 2 வீரர்களின் இடத்தையும், ரஹானே மற்றும் ஷிவம் துபே போன்ற வீரர்கள் பிடித்திருக்கின்றனர். ஆனால் மொயின் அலி மற்றும் அம்பதி ராயுடு இருவருக்குமான ரோல், எதற்காக கீழிறக்கப்பட்டது என்று புரியவில்லை. எப்போதும் பேட்டிங் வரிசையில் இந்த குழப்பமே சென்னை அணியில் இருந்தது இல்லை. பேட்டிங் லைன்-அப்பில் தெளிவு என்பது இல்லாமல் போனது தான், முதலில் நன்றாக விளையாடியவர்கள் தற்போது விளையாடாமல் போனபிறகு அதிகமாக எதிரொலித்துள்ளது.

தொடர்ந்து சொதப்பினாலும், அம்பத்தி ராயுடுவுக்கு வாய்ப்பு ஏன்?

கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை அணியில் எடுக்கப்பட்ட அம்பத்தி ராயுடு, அந்த சீசனின் 16 போட்டிகளில் 602 ரன்களை குவித்து சென்னை அணி கோப்பை வெல்ல பெரிய காரணமாக இருந்தார். அவர் அந்த தொடரில் சென்னைக்காக ஒரு சதத்தையும் அடித்து அசத்தியிருந்தார்.

ambati rayudu

ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில், 12 போட்டிகளில் வெறும் 122 ரன்களை மட்டுமே அடித்து சொதப்பி வருகிறார். தொடர்ந்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தும் போதும், அவருக்கு தொடர்ச்சியாக அணியில் இடமளித்து வருவது, அணியின் வெற்றிக்கு பாதகமாகவே இருந்துவருகிறது. எதற்காக அவர் தொடர்ந்து ஆடவேண்டும்?, அவருக்கான மாற்றுவீரர் அணியில் இல்லையா? என்பது புரியவேயில்லை. எதற்காக சிஎஸ்கே இதை திரும்ப திரும்ப செய்துவருகின்றது என்ற கேள்விக்கு, அவர்கள் தான் பதிலளிக்க வேண்டும்.

சேப்பாக்கத்தில் 7 போட்டியில் 3 தோல்வி, சொந்த மண்ணை புரிந்துகொள்வதில் சிக்கலா?

சொந்த மண்ணாகவே இருந்தாலும், சென்னை அணியானது சேப்பாக்கம் மைதானத்தில் எப்போதும் வெற்றி-தோல்வி என இரண்டு விதமான முடிவுகளையே சந்தித்துள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிரான முந்தைய 6 போட்டிகளில் 4 போட்டியில் வெற்றியை பதிவு செய்திருந்த நிலையிலும், சேப்பாக்கத்தில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் டாஸ் முடிவை தேர்ந்தெடுப்பதில் கோட்டை விட்டது சிஎஸ்கே.

Chepauk

இந்நிலையில் அடுத்த போட்டியில் வெற்றிபெற்று அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தாலும், எலிமினேட்டர், குவாலிஃபயர் என ஏதாவது ஒரு போட்டியில் சென்னையில் விளையாடியே ஆகவேண்டிய நிலை ஏற்படும். அப்போது சென்னை அணி என்ன செய்யப்போகிறது என்ற கேள்வியும் எழுகிறது. இதை அனைத்தையும் சரிசெய்து, சென்னை அணி மீண்டு வருமா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.