ஐபிஎல் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக டிசம்பரில் மெகா ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஏலத்துக்கு முன்பாக அந்தந்த அணிகள் 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் 31-ம் தேதியன்று அனைத்து அணிகளும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டன.
ஒவ்வொரு அணியின் தக்கவைத்த வீரர்கள் பட்டியலின் படி,
CSK - 5 வீரர்கள்
ருதுராஜ் கெய்க்வாட் - ரூ.18 கோடி
ரவீந்திர ஜடேஜா - ரூ.18 கோடி
மதீஷா பத்திரனா - ரூ. 13 கோடி
ஷிவம் துபே - ரூ. 12 கோடி
MS தோனி - ரூ. 4 கோடி
MI - 5 வீரர்கள்
ஜஸ்பிரித் பும்ரா - ரூ.18 கோடி
சூர்யகுமார் யாதவ் - ரூ.16.35 கோடி
ஹர்திக் பாண்டியா - ரூ.16.35 கோடி
ரோகித் சர்மா - ரூ.16.30 கோடி
திலக் வர்மா - ரூ.8 கோடி
RCB - 3 வீரர்கள்
விராட் கோலி - ரூ.21 கோடி
ரஜத் படிதார் - ரூ.11 கோடி
யாஷ் தயாள் - ரூ.5 கோடி
KKR - 6 வீரர்கள்
ரிங்கு சிங் - ரூ.13 கோடி
வருண் சக்ரவர்த்தி - ரூ.12 கோடி
சுனில் நரைன் - ரூ.12 கோடி
ஆண்ட்ரே ரசல் - ரூ.12 கோடி
ஹர்ஷித் ராணா - ரூ.4 கோடி
ரமன்தீப் சிங் - ரூ.4 கோடி
RR - 6 வீரர்கள்
சஞ்சு சாம்சன் - ரூ.18 கோடி
யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரூ.18 கோடி
ரியான் பராக் - ரூ.14 கோடி
துருவ் ஜுரேல் - ரூ.14 கோடி
ஷிம்ரன் ஹெட்மயர் - ரூ.11 கோடி
சந்தீப் சர்மா - ரூ.4 கோடி
SRH - 5 வீரர்கள்
ஹென்ரிச் கிளாசென் - ரூ.23 கோடி
பாட் கம்மின்ஸ் - ரூ.18 கோடி
அபிஷேக் சர்மா - ரூ.14 கோடி
டிராவிஸ் ஹெட் - ரூ.14 கோடி
நிதிஷ் குமார் ரெட்டி - ரூ.6 கோடி
GT - 5 வீரர்கள்
ரஷித் கான் - ரூ.18 கோடி
சுப்மன் கில் - ரூ.16.50 கோடி
சாய் சுதர்சன் - ரூ.8.50 கோடி
ராகுல் தெவாடியா - ரூ.4 கோடி
ஷாருக் கான் - ரூ.4 கோடி
DC - 4 வீரர்கள்
அக்சர் படேல் - ரூ.16.50 கோடி
குல்தீப் யாதவ் - ரூ.13.25 கோடி
டிரிஸ்டன் ஸ்டப்ஸ் - ரூ.10 கோடி
அபிஷேக் போரல் - ரூ. 4 கோடி
LSG - 5 வீரர்கள்
நிக்கோலஸ் பூரன் - ரூ.21 கோடி
ரவி பிஷ்னோய் - ரூ.11 கோடி
மயங்க் யாதவ் - ரூ.11 கோடி
மொசின் கான் - ரூ.4 கோடி
ஆயுஷ் பதோனி - ரூ.4 கோடி
PBKS - 2 வீரர்கள்
ஷஷாங்க் சிங் - ரூ.5.5 கோடி
பிரப்சிம்ரன் சிங் - ரூ.4 கோடி
விடுவிக்கப்பட்ட பட்டியலில் பல நட்சத்திர தொடக்கவீரர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அவர்களுக்கான டிமாண்ட் ஆனது மெகா ஏலத்தில் அதிகமாகவே இருக்கப்போகிறது. சன்ரைசர்ஸ் அணியானது அவர்களுடைய 2 தொடக்கவீரர்களையும் (அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட்) தக்கவைத்திருக்கும் நிலையில், மற்ற அனைத்து அணிகளும் தங்களுடைய வெடித்து சிதறும் ஓப்பனரை தேடவிருக்கின்றன.
அந்தவகையில் பின்வரும் 5 தொடக்க வீரர்கள் ஒவ்வொரு அணியின் பெரிய இலக்காக இருக்கப்போகிறார்கள்..
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், பல சீசன்களில் தனியாளாக அரையிறுதி வரை அணியை அழைத்த சென்றவருமான தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் விடுவிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் அணி விடுவித்தது குறித்து ஜோஸ் பட்லர் உருக்கமாகவும் பேசியுள்ளார்.
ராஜஸ்தான் அணியின் இந்த நடவடிக்கையை பார்த்த ரசிகர்கள், வேற அணிக்கு போய் ராஜஸ்தானையே பட்லர் பொளக்க போகிறார் என பட்லருக்கு ஆதரவாக கருத்திட்டு வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய நம்பர்களை வைத்திருக்கும் ஜோஸ் பட்லர் 107 போட்டிகளில் 147.53 ஸ்ட்ரைக் ரேட்டில் 3582 ரன்கள் குவித்துள்ளார். அதில் 7 சதங்களும், 19 அரைசதங்களும் அடங்கும். 2022 ஐபிஎல் சீசனில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக நான்கு சதங்கள் அடித்து ஒரே தொடரில் 863 ரன்கள் குவித்துள்ளார்.
2022 டி20 உலகக்கோப்பை வென்ற கேப்டனான ஜோஸ் பட்லர் சமீபத்திய ஃபார்ம் அவுட் காரணமாக வெளியேற்றப்பட்டிருந்தாலும், அணிக்கு தேவையான முக்கியமான நேரத்தில் செயல்பட கூடியவர் என்பதால் பெரிய தொகைக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது.
கேஎல் ராகுலின் சமீபத்திய ஃபார்ம் அவுட் அவருக்கு பெரிய பிரச்னையாக இருந்தாலும், அவர் ஃபார்மிற்கு திருப்பினால் ஆபத்தான வீரராக மாறுவார். தொடக்க வீரர் என்பதை தாண்டி கேஎல் ராகுல் ஒரு கேப்டன் மெட்டீரியல் என்பதால் அவரை பல அணிகள் விலைக்கு வாங்க ஆர்வம் காட்டுவார்கள்.
புதிய அணியாக ஐபிஎல்லுக்குள் நுழைந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட நட்சத்திர இந்திய பேட்டர் கே.எல் ராகுல், 2022 மற்றும் 2023 இரண்டு ஐபிஎல் தொடரிலும் LSG அணியை பிளேஆஃப் வரை அழைத்துவந்தார்.
ஐபிஎல் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக 4183 அற்புதமான ரன்களை 48.63 சராசரியுடன் அடித்துள்ளார். அதில் நான்கு சதங்கள் மற்றும் 35 அரைசதங்கள் அவருடைய பெயரில் உள்ளன. சிறந்த ஃபார்மில் இருக்கும்போது சிதறடிக்கும் பேட்டிங் திறமையை கொண்டிருக்கும் ராகுல் 171 சிக்ஸர்கள் மற்றும் 363 பவுண்டரிகளை அடித்துள்ளார்.
2024 ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா அணி வெல்வதற்கான பெரிய காரணிகளில் ஃபிலிப் சால்ட்டும் ஒருவராக இருந்தார்.
முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடக்கூடியவரான சால்ட், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 12 ஆட்டங்களில் பங்கேற்று 435 ரன்கள் எடுத்தார். 89 அவரது அதிகபட்சமாக இருந்தது.
இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஃபிலிப் சால்ட்டுக்கு பல அணிகள் செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அல்லது குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பிரதான போட்டியாளர்களாக இருக்க வாய்ப்பு உள்ளது.
சர்வதேச ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்திருக்கும் இஷான் கிஷன், மீண்டும் இந்திய அணியில் தன்னுடைய இடத்தை தேடிவருவதால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய மெகா ஏலத்தில் ரூ.15.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்ட இஷான் கிஷன் இந்தமுறையும் அதிக தொகைக்கு செல்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு கிரிக்கெட்டில் தனது ஃபார்மை மீண்டும் கண்டுபிடித்ததால், கிஷன் இன்னும் அதிகமாக ஏலம் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. கீப்பர்-பேட்டராக அவரது திறமை அவரை பல அணிகளின் பட்டியலில் சேர்க்கலாம். பாட்னாவில் பிறந்த தொடக்க ஆட்டக்காரர் 55 இன்னிங்ஸ்களில் 141.81 ஸ்ட்ரைக் ரேட்டில் 1733 ரன்கள் எடுத்துள்ளார்.
மாடர்ன் டே கிரிக்கெட்டில் அனைத்து டி20 லீக்குகளிலும் பட்டையை கிளப்பி வருபவர் 22 வயதேயான ஆஸ்திரேலியா தொடக்க வீரர் ஜேக் ஃப்ரேசர்.
கடந்த 2024 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியவர், தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு அழைக்கப்பட்டு தொடக்க வீரராக விளையாடிவருகிறார்.
எந்தவிதமான ஸ்டார் பந்துவீச்சாளர்களையும் பயமின்றி எதிர்த்து ஆடக்கூடியவர் என்பதால், ஜேக் ஃப்ரேசர் அதிக தொகைக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது.