anderson - wiese - nannes - merwe PT
T20

”CSK-RCB-MI அணிக்காக மறக்க முடியாத ஆட்டம்”! டி20 WC-ல் 2 நாட்டிற்காக விளையாடிய 5 IPL வீரர்கள்!

Rishan Vengai

டிர்க் நான்னிஸ்

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்தவரான டிர்க் நான்னிஸ், தன்னுடைய கிரிக்கெட் பயணத்தை ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து தான் தொடங்கினார்.

dirk nannes

சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரையில் 2009 ஜுன் மாதம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் நெதர்லாந்து அணிக்காக தன்னுடைய முதல் அறிமுகத்தை பெற்ற அவர், அதில் 2 போட்டிகளில் விளையாடி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.

dirk nannes

அதற்கு பிறகு 2009 ஆகஸ்ட் மாதமே ஆஸ்திரேலியாவின் ஒருநாள் அணியில் இடம்பிடித்து ஆஸ்திரேலியாவிற்காக விளையாடினார். அதைத்தொடர்ந்து 2010 டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடிய நான்னிஸ், அந்த உலகக்கோப்பை தொடரில் 12 பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை கைப்பற்றினார்.

dirk nannes

அதைத்தொடர்ந்து 2011 ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக ஆடிய நான்னிஸ், 2013 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றார். அந்த சீசனில் எம்எஸ் தோனியின் கீழ் ஐந்து ஆட்டங்களில் விளையாடி, 7.97 என்ற எகானமியுடன் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வான் டர் மெர்வ்

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க்கில் பிறந்த வான் டர் மெர்வ், தன்னுடைய கிரிக்கெட் பயணத்தை தென்னாப்பிரிக்காவிற்காக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமானார்.

வான் டர் மெர்வ்

முதலில் தென்னாப்பிரிக்கா அணிக்காக 2009 மற்றும் 2010 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற அவர், 9 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வான் டர் மெர்வ்

அதனைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணியிலிருந்து வெளியேறி நெதர்லாந்து அணிக்காக விளையாடிய வான் டர் மெர்வ், நெதர்லாந்து அணிக்காக 2016, 2021, 2022 என மூன்று டி20 உலகக்கோப்பையில் விளையாடினார். 12 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை சாய்த்த அவர், 2022 டி20 உலகக்கோப்பையில் அடிப்பட்ட காலுடன் ஒரு ரன்னுக்காக போராடிய சம்பவம் அப்போது எல்லாரின் மனதையும் கவர்ந்தது.

வான் டர் மெர்வ்

ஐபிஎல் தொடரில் 2009ம் ஆண்டு ஆர்சிபி அணியில் விளையாடிய அவர், 2011ல் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம்பிடித்தார்.

மார்க் சாப்மன்

தற்போது நியூசிலாந்தின் தொடக்க வீரராக விளையாடி வரும் 29 வயதான மார்க் சாப்மன் ஹாங் காங்கை பூர்வீகமாக கொண்டவர். தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் பயணத்தை ஹாங் காங் அணியில், 2014ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையிலிருந்து தொடங்கினார்.

மார்க் சாப்மன்

ஹாங் காங் அணிக்காக 2014 மற்றும் 2016 டி20 உலகக்கோப்பையில் விளையாடிய அவர், 6 போட்டிகளில் விளையாடி 123 ரன்களை அடித்தார்.

மார்க் சாப்மன்

அதன்பிறகு தற்போது நியூசிலாந்து அணியில் விளையாடிவரும் சாப்மன், 2022 டி20 உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் மட்டுமே நியூசிலாந்துக்காக பங்கேற்றார். தற்போது 2024 டி20 உலகக்கோப்பையிலும் நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார்.

டேவிட் வைஸ்

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட்டரான டேவிட் வைஸ், தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் பயணத்தை 2013-ல் இலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்கா அணியில் தொடங்கினார். அதற்குபிறகு 2015 ஐபிஎல்லில் ஆர்சிபி அணியில் இடம்பிடித்த டேவிட் வைஸ், மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே 25 பந்துகளுக்கு 47 ரன்கள் அடித்து அசத்தினார்.

டேவிட் வைஸ்

2016 டி20 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடிய அவர், 3 போட்டிகளில் விளையாடி 28 ரன்கள் மற்றும் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

டேவிட் வைஸ்

தற்போது 39 வயதாகும் டேவிட் வைஸ் நமீபியா அணிக்காக 2024 டி20 உலகக்கோப்பையில் இடம்பிடித்துள்ளார். இதற்குமுன்பு நமீபியாவிற்காக 11 டி20 உலகக்கோப்பை போட்டியில் விளையாடியிருக்கும் அவர், 293 ரன்களை குவித்துள்ளார்.

டேவிட் வைஸ்

நடப்பு டி20 உலகக்கோப்பையின் முதல் போட்டியில் கூட பேட்டிங் பவுலிங் இரண்டிலும் மிரட்டிய டேவிட் வைஸ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கோரி ஆண்டர்சன்

நியூசிலாந்தின் நட்சத்திர வீரரான கோரி ஆண்டர்சன், பல மறக்க முடியாத ஆட்டங்களை விளையாடியுள்ளார். 2012ம் ஆண்டு நியூசிலாந்துக்காக சர்வதேச அறிமுகத்தை பெற்ற அவர், 2013ம் ஆண்டு நியூசிலாந்தின் டெஸ்ட் கேப்பையும் கைப்பற்றினார்.

கோரி ஆண்டர்சன்

நியூசிலாந்துக்காக 2014 மற்றும் 2016 டி20 உலகக்கோப்பைகளில் விளையாடிய அவர், 9 போட்டிகளில் 113 ரன்களுடன் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

கோரி ஆண்டர்சன்

தற்போது அமெரிக்கா அணிக்காக 2024 டி20 உலகக்கோப்பையில் பங்கேற்றிருக்கும் கோரி ஆண்டர்சன், கனடா அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஒரு விக்கெட்டுடன் 29 ரன்களையும் விளாசினார்.

கோரி ஆண்டர்சன்

2014 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 195 ரன்கள் ரன் சேஸ்ஸை 14.4 ஓவரில் முடிக்க, கோரி ஆண்டர்சன் ஆடிய ருத்ரதாண்டவ பேட்டிங்கை எந்த மும்பை இந்தியன்ஸ் ரசிகராலும் மறக்கமுடியாது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான அந்த போட்டியில் 44 பந்துகளில் 9 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் உட்பட 95 ரன்களை குவித்திருந்தார் கோரி ஆண்டர்சன். கடைசியாக ஆர்சிபி அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

tim david

அதேபோல ஆஸ்திரேலியா அணி மற்றும் மும்பை அணியின் ஹிட்டிங் பேட்ஸ்மேனான டிம் டேவிட் சிங்கப்பூர் அணிக்காக 2019-ல் டி20 கிரிக்கெட்டில் சர்வதேச அறிமுகத்தை பெற்றார். அதற்கு பிறகு ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடிவருகிறார்.