ஐபிஎல் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக டிசம்பரில் மெகா ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஏலத்துக்கு முன்பாக அந்தந்த அணிகள் 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் 31-ம் தேதியன்று அனைத்து அணிகளும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டன.
ஒவ்வொரு அணியின் தக்கவைத்த வீரர்கள் பட்டியலின் படி,
CSK - 5 வீரர்கள்
ருதுராஜ் கெய்க்வாட் - ரூ.18 கோடி
ரவீந்திர ஜடேஜா - ரூ.18 கோடி
மதீஷா பத்திரனா - ரூ. 13 கோடி
ஷிவம் துபே - ரூ. 12 கோடி
MS தோனி - ரூ. 4 கோடி
MI - 5 வீரர்கள்
ஜஸ்பிரித் பும்ரா - ரூ.18 கோடி
சூர்யகுமார் யாதவ் - ரூ.16.35 கோடி
ஹர்திக் பாண்டியா - ரூ.16.35 கோடி
ரோகித் சர்மா - ரூ.16.30 கோடி
திலக் வர்மா - ரூ.8 கோடி
RCB - 3 வீரர்கள்
விராட் கோலி - ரூ.21 கோடி
ரஜத் படிதார் - ரூ.11 கோடி
யாஷ் தயாள் - ரூ.5 கோடி
KKR - 6 வீரர்கள்
ரிங்கு சிங் - ரூ.13 கோடி
வருண் சக்ரவர்த்தி - ரூ.12 கோடி
சுனில் நரைன் - ரூ.12 கோடி
ஆண்ட்ரே ரசல் - ரூ.12 கோடி
ஹர்ஷித் ராணா - ரூ.4 கோடி
ரமன்தீப் சிங் - ரூ.4 கோடி
RR - 6 வீரர்கள்
சஞ்சு சாம்சன் - ரூ.18 கோடி
யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரூ.18 கோடி
ரியான் பராக் - ரூ.14 கோடி
துருவ் ஜுரேல் - ரூ.14 கோடி
ஷிம்ரன் ஹெட்மயர் - ரூ.11 கோடி
சந்தீப் சர்மா - ரூ.4 கோடி
SRH - 5 வீரர்கள்
ஹென்ரிச் கிளாசென் - ரூ.23 கோடி
பாட் கம்மின்ஸ் - ரூ.18 கோடி
அபிஷேக் சர்மா - ரூ.14 கோடி
டிராவிஸ் ஹெட் - ரூ.14 கோடி
நிதிஷ் குமார் ரெட்டி - ரூ.6 கோடி
GT - 5 வீரர்கள்
ரஷித் கான் - ரூ.18 கோடி
சுப்மன் கில் - ரூ.16.50 கோடி
சாய் சுதர்சன் - ரூ.8.50 கோடி
ராகுல் தெவாடியா - ரூ.4 கோடி
ஷாருக் கான் - ரூ.4 கோடி
DC - 4 வீரர்கள்
அக்சர் படேல் - ரூ.16.50 கோடி
குல்தீப் யாதவ் - ரூ.13.25 கோடி
டிரிஸ்டன் ஸ்டப்ஸ் - ரூ.10 கோடி
அபிஷேக் போரல் - ரூ. 4 கோடி
LSG - 5 வீரர்கள்
நிக்கோலஸ் பூரன் - ரூ.21 கோடி
ரவி பிஷ்னோய் - ரூ.11 கோடி
மயங்க் யாதவ் - ரூ.11 கோடி
மொசின் கான் - ரூ.4 கோடி
ஆயுஷ் பதோனி - ரூ.4 கோடி
PBKS - 2 வீரர்கள்
ஷஷாங்க் சிங் - ரூ.5.5 கோடி
பிரப்சிம்ரன் சிங் - ரூ.4 கோடி
ஒவ்வொரு அணியும் தங்களுடைய தக்கவைக்கும் வீரர்களை அறிவித்திருக்கும் நிலையில், பல முக்கியமான வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் களமிறங்கவிருக்கின்றனர். அந்தவகையில் மேகா ஆக்சனில் ஏல போரையே நிகழ்த்துமளவிற்கு 5 முக்கியமான இந்திய வீரர்கள் களமிறங்கவிருக்கின்றனர்.
மிகப்பெரிய விபத்திற்கு பிறகு திரும்பிய இந்தியாவின் அதிரடி வீரர் ரிஷப் பண்ட், டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான 8 ஆண்டுகள் பந்தத்திற்கு பிறகு ஏலத்திற்கு வருவது மிகப்பெரிய ஏல போரையே உருவாக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவருடைய ஆக்ரோஷமான பேட்டிங் மற்றும் தலைமைத்துவத்திற்கான தகுதி போன்றவை பல அணிகளின் முக்கிய இலக்காக ரிஷப் பண்ட்டை மாற்றியுள்ளது.
ரிஷப் பண்ட்டுக்கான ஏலப் போரில்,
சிஎஸ்கே - மகேந்திர சிங் தோனி போன்ற ஒரு மாஸ்டர் கிளாஸ் விக்கெட் கீப்பருக்கு மாற்றுவீரராக சிஎஸ்கே அணியின் தேடல் என்பதால் சிஎஸ்கே அணி முடிந்தவரை ரிஷப் பண்ட்டுக்கு செல்லும். ஒருவேளை MSD-க்கு மாற்றுவீரர் என முடிவுசெய்துவிட்டால் கடைசிவரை சிஎஸ்கே முட்டிமோத வாய்ப்பு இருக்கிறது
கேகேஆர் - முழுமையான விக்கெட் கீப்பர் இல்லை, ஒரு வீரரை குறிவைத்துவிட்டால் கடைசிவரை கேகேஆர் அணி பின்வாங்க மாட்டார்கள் என்பதால் பெரிய தேடலாக ரிஷப் பண்ட் இருப்பார்
ஆர்சிபி - வலுவான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர், கேப்டன் தேவை என்பதால், ரிஷப் பண்ட் போன்ற வீரருக்கு நிச்சயம் ஆர்சிபி அணி அதிக விலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது
பஞ்சாப் கிங்ஸ் - கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர், ரிக்கி பாண்டிங் தலைமை பயிற்சியாளராக இருப்பதால் பஞ்சாப் கிங்ஸ் அதிக விலைக்கு செல்ல வாய்ப்பு, 110 கோடி கையில் இருப்பதால் பஞ்சாப் கிங்ஸ் கையிலிருந்து ரிஷப் பண்ட்டை கொத்திச்செல்ல எந்தஅணி முயல்கிறது என்பதே ஐபிஎல் ஏலத்தில் முக்கியமான தருணமாக இருக்கப்போகிறது
MI மற்றும் GT - இரண்டு அணிகளுக்கும் முழுமையான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இல்லை என்பதால் ரிஷப் பண்ட்டுக்கான் ரேஸில் மும்பை மற்றும் டைட்டன்ஸ் அணிகள் இருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அவர்களிடம் 45கோடி மற்றும் 69கோடி மட்டுமே இருப்பது மற்றவீரர்களை தேர்ந்தெடுப்பதில் சிக்கலாக அமைய வாய்ப்பு உள்ளது.
2025 ஐபிஎல்லில் கேப்டனை தேடும் அனைத்து அணியும் ஸ்ரேயாஸ் ஐயரை குறிவைக்க வாய்ப்பிருக்கிறது. நடப்பு ஐபிஎல் கோப்பை வென்ற கேப்டனாக இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர், மிடில் ஆர்டரில் ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடக்கூடியவர் என்பதால் அவருக்கான டிமாண்டும் அதிகமாகவே இருக்கும்.
ஸ்ரேயாஸ் ஐயருக்க்கான ஏலப் போரில்,
பஞ்சாப் கிங்ஸ் - கேப்டன் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதால் நிச்சயம் பஞ்சாப் கிங்ஸ் அணி ஸ்ரேயாஸ் ஐயருக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது, ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் ரிக்கி பாண்டிங் தலைமையில் விளையாடியிருப்பதால் அவர்களை இருவரையும் விலைக்கு வாங்க அதிக விலைக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது.
ஆர்சிபி - பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு போட்டியாக நிச்சயம் ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயருக்கான ஏல போரில் ஆர்சிபி இருக்கும், அவர்கள் தங்களுடைய வலுவான அணியை கட்டமைக்கும் தேடலில் இருப்பதால் ஸ்ரேயாஸ் ஐயருக்கான போட்டியில் ஆர்சிபி மிகப்பெரிய ஏலத்தொகைக்கு செல்லும்
டெல்லி கேபிடல்ஸ் - முன்பு டெல்லியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் அந்த அணிக்கே கேப்டனாக திரும்பவும் வாய்ப்பிருக்கிறது. டெல்லி அணியிலிருந்து ரிஷப் பண்ட் வெளியேறியிருப்பதால், அவர்களுக்கான கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் சிறந்த தேர்வாக இருப்பார். 73 கோடியை கையில் வைத்திருக்கும் டெல்லி அணி ஸ்ரேயாஸ் ஐயருக்கு அதிக விலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.
LSG- 3ம் நிலை வீரர் தேவை மற்றும் கேப்டன்சி மெட்டீரியல் என்பதால் ஸ்ரேயாஸ் ஐயருக்கான ஏல போரில் லக்னோ அணியும் நிச்சயம் இருக்க வாய்ப்பு உள்ளது.
சிஎஸ்கே - கடந்த் ஐபிஎல் தொடரில் மிடில் ஆர்டர் பிரச்னை இருந்ததால் அதற்கான தீர்வாக ஸ்ரேயாஸ் ஐயருக்கு செல்ல அதிக வாய்ப்புகள் இருக்கின்றன
கேப்டன் மற்றும் தொடக்கவீரருக்கான ஸ்லாட் இரண்டுக்குமான தீர்வாக கேஎல் ராகுல் இருப்பார் என்பதால், அவருக்கான தேடலில் பல முக்கியமான அணிகள் களமிறங்க வாய்ப்பு உள்ளது.
கேஎல் ராகுலுக்கான ஏலப் போரில்,
ஆர்சிபி- தொடக்க வீரர் மற்றும் கேப்டன் இரண்டுக்குமான தேடலாக ஆர்சிபி அணியின் சிறந்த தேர்வாக கேஎல் ராகுல் இருக்க வாய்ப்பு இருக்கிறது. முன்னாள் ஆர்சிபி வீரர் மற்றும் ஹோம் பாய் என்பதால் கேஎல் ராகுலுக்கு ஆர்சிபி அணி அதிக விலைக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது.
பஞ்சாப் கிங்ஸ் - சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்த தற்போதைய பஞ்சாப் கிங்ஸ் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், எங்களுடைய தேர்வுக்கான சில நல்ல வீரர்கள் ஏலத்தில் இருப்பதாக கேஎல் ராகுலின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார். அந்தவகையில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் கேஎல் ராகுலுக்கான போட்டியில் வலுவானதாக இருக்கும்.
கேகேஆர் - கேப்டன் மற்றும் தொடக்கவீரருக்கான ஸ்லாட் ஓப்பனாக இருப்பதால் கேகேஆர் அணியின் பார்வையும் கேஎல் ராகுல் மீது இருந்துவருகிறது.
சிஎஸ்கே - தொடக்க வீரர் மற்றும் விக்கெட் கீப்பருக்கான ஒரே தேடலாக கேஎல் ராகுல் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
இந்திய இடது கை வேகப்பந்துவீச்சாளருக்கு எப்போதுமே மிகப்பெரிய வரவேற்பு இருந்துவருகிறது. அந்தவகையில் ஒப்பனிங் ஓவர்கள் மற்றும் டெத் ஓவர்களில் சிறப்பாக வீசக்கூடிய இளம் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களில் அர்ஷ்தீப் சிங் முக்கியமான வீரராக ஏலத்தில் இருப்பார்.
அர்ஷ்தீப் சிங்குக்கான ஏலப் போரில்,
மும்பை இந்தியன்ஸ் - எப்போதும் இடது கை வேகப்பந்துவீச்சாளர்களின் பெரிய விருப்ப அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி இருந்துள்ளது. அதன்படி பும்ராவிற்கு இணை பந்துவீச்சாளராக அர்ஷ்தீப் சிங்குக்கு மும்பை செல்ல வாய்ப்பிருக்கிறது.
சிஎஸ்கே - பவர்பிளே ஓவரில் விக்கெட் தேடுதல் மற்றும் டெத் ஓவர்களில் சிறப்பான தேர்வாக அர்ஷீப் சிங்குக்கு செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.
SRH - சன்ரைசர்ஸ் அணி அவர்களின் பந்துவீச்சாளர்களை வெளியேற்றியுள்ளதால், அவர்களின் மிகப்பெரிய குறியாக அர்ஷ்தீப் சிங் இருக்க வாய்ப்பு உள்ளது.
ஆர்சிபி - ஆர்சிபி அணியின் மற்றொரு பெரிய தேடலாக அர்ஷ்தீப் சிங் இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
ராஜஸ்தான் ராயல்ஸ் - இந்த ஏல வாரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மிகப்பெரிய பங்குவகிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பேட்ஸ்மேன்களை டிக் செய்திருக்கும் அந்த அணி, வேகப்பந்துவீச்சாளர்களை குறிவைத்திருக்கிறது.
கேகேஆர் - கொல்கத்தா அணி ஹர்சித் ரானா, ரஸ்ஸல், நரைன் என 3 பவுலர்களை டிக் செய்துள்ள நிலையில், ஓப்பனிங் ஸ்பெல் வீசக்குடிய பவுலராக அர்ஷ்தீப் சிங்குக்கு செல்லவும் வாய்ப்பு உள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணி தக்கவைக்கவும் வாய்ப்பு உள்ளது.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், தொடக்க வீரர் மற்றும் மிடில் ஆர்டர் வீரர் என பல்வேறு இடங்களில் இஷான் கிஷன் பொருந்திப்போவார் என்பதால் இவருக்கான ஏலமானது மிகப்பெரிய தொகைக்கு எடுத்து செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இஷான் கிஷனுக்கான ஏல போரில்,
சிஎஸ்கே - ரிஷப் பண்ட் கிடைக்கவில்லை என்றால் தொடக்க வீரர் மற்றும் விக்கெட் கீப்பர் என்ற இரண்டு தேவைக்கும் சிறந்த தீர்வாக இஷான் கிஷன் இருப்பார். சுரேஷ் ரெய்னாவிற்கு பிறகான சிறந்த இடதுகை வீரராக இஷான் கிஷன் நீண்டகாலத்திற்கு விளையாட வாய்ப்பிருக்கிறது.
ஆர்சிபி - இடதுகை வீரர் மற்றும் அதிரடியான ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்ற பெரிய தேவை ஆர்சிபி அணிக்கு இருக்கிறது என்பதால் அவர்களுக்கான டார்கெட்டில் இஷான் கிஷனும் இருப்பார்.
கேகேஆர் - கொல்கத்தா அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் தொடக்கவீரருக்கான ஸ்லாட் இருப்பதால், இஷான் கிஷன் மீது அவர்களுடைய பார்வையும் இருந்துவருகிறது.
பஞ்சாப் கிங்ஸ் - எப்போதும் இந்தியாவின் இளம்வீரர்கள் மீது அதிக ஆர்வம் உடையவரான ரிக்கி பாண்டிங், இஷான்கிஷனுக்கும் குறிவைக்க வாய்ப்புள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் - அனைத்து அணிகளை விட டெல்லி அணிக்கு இஷான் கிஷன் முக்கிய வீரராக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
குஜராத் டைட்டன்ஸ் - விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் தொடக்கவீரருக்கான இரண்டு தேவையும் டைட்டன்ஸ் அணிக்கு இருப்பதால் அவருகளுக்கான தேடலாக இஷன் கிஷன் இருக்க வாய்ப்பு இருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் - மும்பை அணியில் விக்கெட் கீப்பர் தேவை இருப்பதால், அவர்கள் இஷான் கிஷனை தக்கவைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது.