சையத் மோதி சர்வதேச பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று பி.வி.சிந்து, சாம்பியன் பட்டத்தை பெற்றார்.
அரையிறுதியில் சிந்துவை எதிர்த்து விளையாடவிருந்த ஐந்தாம் நிலை வீராங்கனையான எவ்ஜெனியா கோஸட்க்யா காயம் காரணமாக பாதியில் விலகினார். இதையடுத்து சிந்து இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றார். மற்றொரு அரையிறுதியில் மாளவிகா பன்சோட், அனுபமா உபாத்தியாயாவை மூன்று செட்களில் போராடி தோற்கடித்தார்.
இந்த நிலையில், லக்னோவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இருமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற வரலாற்று நாயகியான சிந்து, எஸ்ஆர்.எம்.பல்கலைக்கழக மாணவி மாளவிகா பன்சோட்டை எதிர்கொண்டார்.
விறு விறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 21-13, 21-16 என்ற நேர்செட் கணக்கில் வென்ற பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை தகதாக்கிக் கொண்டார். இறுதிப் போட்டி வரை முன்னேறிய எஸ்ஆர்எம் பல்கலைக்கழக மாணவி மாளவிகா பன்சோட் வெள்ளிப் பதக்கம் வென்றார்.