இந்தியக் கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியை இன்ஸ்டாகிராமில் ஒருவர் இனவெறி கருத்தால் தாக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, இந்தியக் கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரியுடன் இன்ஸ்டாகிராமில் நேரலையில் உரையாடினார். இந்த உரையாடலில் பல்வேறு விஷயங்களைக் கோலி பகிர்ந்து கொண்டார். குறிப்பாக தன்னுடைய இளமைக்கால கிரிக்கெட் வாழ்க்கை குறித்தும் தன்னுடைய தந்தை குறித்தும் நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
அப்போது இருவரும் உரையாடிக்கொண்டிருக்கும்போது இன்ஸ்டாவில் இருக்கும் கமெண்ட் பாக்சில் ஒருவர் சுனில் சேத்ரியை, “யார் இந்த நேபாளி?” என்று கேட்டுள்ளார். இதனை டவிட்டர் பயன்படுத்தும் அபினல் காகா என்பவர் இந்த கமெண்ட்டை ஸ்கிரீன் ஷாட்டை கருத்துடன் பகிர்ந்து கொண்டார் மற்றும் வடகிழக்கு மக்கள் மீதான இனவெறி அணுகுமுறையைக் கண்டித்துப் பதிவிட்டுள்ளார்.
அதில் "இந்தியக் கால்பந்து கேப்டன் நேபாளி என்று அழைக்கப்படுகிறார், இங்குள்ள வடகிழக்கு மக்களின் அவல நிலையை மட்டுமே கற்பனை செய்ய முடியும். சேத்ரியை மக்கள் அறியாதது இன்னும் நன்றாக இருக்கிறது, ஆனால் சமூகம் அவர்களை நோக்கி இயல்பாக்கப்பட்ட சிங்கி, நேபாளி போன்ற சொற்களைப் பயன்படுத்துகிறது. இது வெட்கப்பட வேண்டிய ஒன்று" எனப் பதிவிட்டார்.
இதனையடுத்து சுனில் சேத்ரி, கோலி உரையாடியபோது இனவெறி கமெண்ட்டை கொடுத்த நபரின் இன்ஸ்டாகிராம் பக்கம் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.