விளையாட்டு

கேப்டன் சனகா அதிரடி... இந்தியாவுக்கு இலக்கு நிர்ணயித்த இலங்கை

கேப்டன் சனகா அதிரடி... இந்தியாவுக்கு இலக்கு நிர்ணயித்த இலங்கை

JustinDurai

பந்துகளை பவுண்டரிகளாகவும் சிக்சர்ககளாகவும் பறக்க விட்ட இலங்கை அணி கேப்டன் தசுன் சனகா 38 பந்துகளில் 74 ரன்கள் விளாசினார்.

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி தர்மசாலாவில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா ஏற்கெனவே தொடரைக் கைப்பற்றி விட்ட நிலையில், தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்தியாவும், ஆறுதல் வெற்றிக்காக இலங்கையும் முனைப்புக் காட்டி விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முகமது சிராஜ், அவேஷ் கான், ரவி பிஸ்னாய், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

முன்னணி பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இந்திய அணி, அபாரமாக விளையாடியது. இலங்கை அணியின் தொடக்க, நடுவரிசை பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். 25 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறிய நிலையில் தினேஷ் சண்டிமால், தசுன் ஷனாகா சீராக ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக விளையாடிய தசுன் ஷனாகா 38 பந்துகளில் 74 ரன்கள் (9 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) விளாசினர். இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 147 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்தியா களமிறங்குகிறது.

அவேஷ் கான் 2 விக்கெட்டுகளும், முகமது சிராஜ், ஹர்ஷல் படேல், வி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.