அபுதாபியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டேவிட் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணி .
டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி இருபது ஓவர் முடிவில் 162 ரன்களை 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு எடுத்திருந்தது.
வார்னர் (45 ரன்கள்), பேர்ஸ்டோ (53 ரன்கள்) மற்றும் வில்லியம்சன் (41 ரன்கள்) ஹைதராபாத் அணிக்காக ரன்களை குவித்தனர்.
இதனையடுத்து 163 ரன்களை விரட்டியது பலமான பேட்டிங் லைன் அப் கொண்ட டெல்லி.
ஆனால் முதல் ஓவரிலிருந்தே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது டெல்லி.
பிருத்வி ஷா, ஷ்ரேயஸ் ஐயர், தவான், ஹெட்மயர், பண்ட், ஸ்டாய்னிஸ், அக்சர் பட்டேல் என டெல்லி பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.
இருபது ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களை மட்டுமே எடுத்து வீழ்ந்தது டெல்லி.
இதன் மூலம் முதல் வெற்றியை பதிவு செய்தது ஹைதராபாத்.
ஹைதராபாத் பவுலர்கள் ரஷீத் கான் (3 விக்கெட்), புவனேஷ்வர் குமார் (2 விக்கெட்) மற்றும் நடராஜன், கலீல் அகமது தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.