விளையாட்டு

கடைசிப் போட்டியில் ஏமாற்றிய விராட் கோலி, டிவில்லியர்ஸ்

கடைசிப் போட்டியில் ஏமாற்றிய விராட் கோலி, டிவில்லியர்ஸ்

webteam

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி விராட் கோலி, டிவில்லியர்ஸ் விக்கெட்களை இழந்து தடுமாறிவருகிறது.

ஐபிஎல் தொடரில் பெங்களூரில் இன்று நடைபெற்று வரும் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணியில் சாஹா மற்றும் கப்தில் சிறப்பான தொடக்கம் அளித்தனர். இவர்கள் இருவரும் முதல் 4 ஓவர்களில் 46 ரன்கள் சேர்த்தனர். சாஹா 11 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய மனிஷ் பாண்டே வெறும் 9 ரன்களில் வெளியேறினார். 

அதன்பின்னர் களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன் அசத்தலாக ஆடினார். இவரின் ஆபார ஆட்டத்தால் ஹைதராபாத் அணி நல்ல ஸ்கோரை எட்டியது. இவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 4 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 43 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். இதனால் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டை கைப்பற்றினார். 

176 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய பெங்களூர் அணியில் பார்த்திவ் பட்டேல் முதல் ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் விராட் கோலியும் 16 ரன்களுக்கு அவுட் ஆனார். இவர்களை தொடர்ந்து டிவில்லியர்ஸ் 1 ரன்னில் நடையை கட்டினார். இதனால் பெங்களூர் அணி முதல் 3 ஓவருக்குள் 3 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது. சற்று முன் வரை 5 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 3 விக்கெட் இழப்பிற்கு   ரன்கள் எடுத்து விளையாடிவருகிறது.