விளையாட்டு

சிக்ஸர்கள் அடித்தாலும் மறையாத சர்ச்சை - பாண்ட்யாவுக்கு எதிராக பதாகை ஏந்திய பெண்

சிக்ஸர்கள் அடித்தாலும் மறையாத சர்ச்சை - பாண்ட்யாவுக்கு எதிராக பதாகை ஏந்திய பெண்

rajakannan

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகையை இந்திய பெண் ஒருவர் வைத்திருந்தார். 

ஆஸ்திரேலிய பயணத்தின்போது டிவி நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசியதால் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் அணியிலிருந்து நீக்கப்பட்டனர். விசாரணை முடியும் வரை அணியில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் இருவகையான கருத்துக்கள் எழுந்ததால் பாண்ட்யா, ராகுல் மீதான தடை நீக்கப்பட்டது. நியூஸிலாந்திற்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இருந்து ஹர்திக் மீண்டும் விளையாடினார். 

அந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட் சாய்த்தார். பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. 4-வது போட்டியில் 16 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து, 5-வது ஒருநாள் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்தினார். அதிரடியாக விளையாடி 45 ரன்கள் எடுத்ததோடு, 2 விக்கெட்களையும் சாய்த்தார். 5 சிக்ஸர்களையும் விளாசினார். ஆஸ்ட்லே வீசிய 47-வது ஓவரின் 2,3,4 ஆகிய பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்தார் பாண்ட்யா. 

தற்போது, டி20 தொடரிலும் விளையாடி வருகிறார். சர்ச்சைக்கு பிறகு ஹர்திக் பாண்ட்யா சிறப்பான முறையில் விளையாடி வருகிறார். இருப்பினும், அவர் மீதான சர்ச்சை மறையவில்லை என்பதை நேற்றை போட்டியின் போது நடந்த நிகழ்வு கூறுகின்றது. மைதானத்தில் இருந்த பெண் ஒருவர் பாண்ட்யாவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகையை தாங்கி இருந்தார். இந்த படம் சமூக வலைதளத்தில் வைரல் ஆனது.