வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில், இவ்விரு அணிகளுக்கான முதல் டெஸ்ட் போட்டி இன்று (அக்.21) மிர்பூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய வங்கதேச வீரர்கள் தென்னாப்பிரிக்கா வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
குறிப்பாக மஹ்முதுல் ஹாசன் ஜாய் தொடக்க வீரரின் விக்கெட்டை தவிர, அவருடன் இணைந்து விளையாடிய சத்மான் இஸ்லாம் (0), மாமினுள் ஹாகு (4) மற்றும் கேப்டன் நஜ்மல் ஹுசைன் (7) ஆகியோரை தன்னுடைய அதிவேகப் பந்துவீச்சு புயலால் வீழ்த்தி விரைவிலேயே பெவிலியன் அனுப்பினார்.
எனினும், அவருக்குப் பின்பும் தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர்களின் விக்கெட் வேட்டை தொடர்ந்தது. தென்னாப்பிரிக்க அணியின் அனுபவ வீரரான ரபாடா, முஸ்பிகுர் ரஹீம் (11), லிட்டன் தாஸ் (1), நயீம் ஹாசன் (8) ஆகியோரின் விக்கெட்களை வீழ்த்தினார். தொடர்ந்து மகாராஜ், ஹாசன் மிராஜையும் ஜேகர் அலியையும், தாஷுல் இஸ்லாமையும் வெளியேற்றினார். இறுதியாக, நல்ல அடித்தளமிட்டு நின்ற மஹ்முதுலை பியடிட் பிரித்தார்.
இதனால் அந்த அணி வெறும் 40.1 ஓவர்களில் 106 ரன்களுக்குச் சுருண்டது. இதில் மூல்டர், ரபாடா, மகராஜ் ஆகியோ தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் 147 ஆண்டுகால சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை ரபாடா பெற்றுள்ளார். ரபாடா டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,817 பந்துகள்வீசி 300 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
இதற்கு முன்பு பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ் 12,602 பந்துகள் வீசி 300 விக்கெட் வீழ்த்தி இருந்தது சாதனையாக இருந்தது. தற்போது மூன்றாவது இடத்தில் மற்றொரு தென்னாப்பிரிக்க வீரரான டெல் ஸ்டையின் 12,605 பந்துகளில் 300 விக்கெட்களும், நான்காம் இடத்தில் ஆலன் டொனால்ட் 13,672 பந்துகளில் 300 விக்கெட்டுகளும் கைப்பற்றி உள்ளனர். அதேபோன்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் மால்கோ மார்ஷல் 13,728 பந்துகள் வீசி 300 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்.