விளையாட்டு

கடைசி டெஸ்ட் போட்டியில் மோர்னே மோர்கல்!

கடைசி டெஸ்ட் போட்டியில் மோர்னே மோர்கல்!

webteam

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சுக்கு நான் ரசிகன் என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கிப்சன் கூறினார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுபயணம் செய்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. கேப்டவுனில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 322 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியின் 3-வது நாளில் ஆஸ்திரேலிய இளம் வீரர் கேமரூன் பேன்கிராஃப்ட், கேப்டன் ஸ்மித், துணைக் கேப்டன் வார்னர் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கினர். இதையடுத்து ஸ்மித்துக்கும் வார்னருக்கும் ஒரு வருட தடையும் பேன்கிராஃப்டுக்கு ஒன்பது மாத தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஸ்மித்துக்குப் பதிலாக விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் 46 வது டெஸ்ட் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது. வார்னர் மற்றும் பேன்கிராஃப்டுக்கு பதிலாக ஜோ பர்ன்ஸ், மேட் ரென்ஷா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடக்கிறது. முக் கியமான வீரர்கள் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி களமிறங்குவதால் இந்த டெஸ்ட்டை தென்னாப்பிரிக்கா வெல்ல வாய்ப் பிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த டெஸ்ட் போட்டிதான் தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் மோர்னே மோர்கலுக்கு கடைசி டெஸ்ட். இந்த போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். கடந்த டெஸ்ட் போட்டியில் மோர் கல் சிறப்பாக பந்துவீசி 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தக் கடைசி போட்டியிலும் அவர் சிறப்பாக பந்துவீசுவார் என எதிர் பார்க்கப்படுகிறது. 

தென்னாப்பிரிக்க பயிற்சியாளர் கிப்சன் கூறும்போது, ‘ வார்னர், ஸ்மித் இல்லை என்றாலும் அந்த அணி வலுவான அணிதான். அதைக் குறைத்து மதிப்பிடவில்லை. ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் சிறந்த வீரர்கள். அவர்களது வேகபந்துவீச்சு தாக் குதலுக்கு நான் ரசிகன்’ என்றார்.