விளையாட்டு

முதல்ல திட்டுவேன், பிறகு மன்னிப்புக் கேட்பேன்: பாக்.கிரிக்கெட் கேப்டன்!

முதல்ல திட்டுவேன், பிறகு மன்னிப்புக் கேட்பேன்: பாக்.கிரிக்கெட் கேப்டன்!

webteam

கோபம் வந்தால் வீரர்களை முதலில் திட்டிவிடுவேன். பிறகு மன்னிப்புக் கேட்பேன் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது கூறினார்.

இலங்கை அணியுடனான 2-வது ஒரு நாள் போட்டியில் நேற்று மோதிய பாகிஸ்தான் அணி, போராடி வெற்றிப்பெற்றது. போட்டியின் போது தனது அணி வீரர்களிடம் கடுமையாக நடந்துகொண்டார் பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது. வெற்றிக்குப் பின் அவரிடம் இதுபற்றி கேட்டபோது, ’போட்டியின் போது சில நேரங்களில் இப்படி கடுமையாக நடந்துகொள்ள வேண்டி இருக்கிறது. பேட்டிங்கின் போது திடீரென்று விக்கெட்டுகள் வரிசையாக சரிய தொடங்கிவிட்டன. பீல்டிங்கின் போதும் பிட்ச்சின் தன்மை மாறிவிட்டது. இதனால் கோபம் வெளிப்பட்டது. கோபம் வந்தால் திட்டிவிடுவேன். பிறகு வீரர்களிடம் அதற்கு மன்னிப்புக் கேட்டுவிடுவேன். இது வீரர்களுக்கும் தெரியும். இந்தப் போட்டியில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். பாபர் சிறப்பாக ஆடி இந்தப் போட்டியிலும் சதமடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்றார்.