விளையாட்டு

ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ள அலைச்சறுக்கு, மலையேற்றம்!

ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ள அலைச்சறுக்கு, மலையேற்றம்!

webteam

ஜப்பானின் டோக்கியோ நகரில் அடுத்தாண்டு ஜூலை மாதம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் 33 விளையாட்டுகள் இடம்பெறவுள்ளன. 

ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் 2020ம் ஆண்டு ஜூலையில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ளன. இதற்காக ஜப்பான் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த ஆண்டு பேஸ்பால், கராத்தே, மலையேற்றம், அலைச்சறுக்கு, ஸ்கேட் போர்டிங் ஆகிய விளையாட்டு போட்டிகளும் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. 

ஜப்பானிலுள்ள ஷோனான் என்ற கிராமத்தில்தான் முதன்முதலில் அலைச்சறுக்கு தோன்றியது. ஜப்பானில் தோன்றிய விளையாட்டு, அந்நாட்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலேயே அறிமுகப்படுத்தப்படுவது மிகவும் பெருமையாக இருப்பதாக அந்நாட்டு விளையாட்டு வீரர்கள் தெரிவிக்கின்றனர். 

சிபா நகரில் உள்ள Ichinomiya கடற்கரையில் இந்த அலைச்சறுக்கு ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது. ஜப்பானிய மொழியில் இட்டாகோ ‌ என அழைக்கப்படும் இந்த விளையாட்டிற்காக அங்குள்ள கடற்கரையும், அந்நாட்டு அலைச்சறுக்கு வீரர்களும் தயாராகி வருகின்றனர்.