விளையாட்டு

அறிமுக டெஸ்ட் போட்டியிலே அதிரடி காட்டிய ஷபாலி வெர்மா - இந்திய மகளிர் அணி தடுமாற்றம்

அறிமுக டெஸ்ட் போட்டியிலே அதிரடி காட்டிய ஷபாலி வெர்மா - இந்திய மகளிர் அணி தடுமாற்றம்

jagadeesh

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி பிரிஸ்டோலில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பெண்கள் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனை டாமி பியுமோன்ட் 66 ரன்களும், கேப்டன் ஹீதர் நைட் 95 ரன்களும் விளாச நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து பெண்கள் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து இரண்டாம் நாள் ஆட்ட்ததை நேற்று சோபியா டங்க்ளி 12 ரன்னுடனும், கேதரின் ப்ருன்ட் 7 ரன்னுடனும் தொடர்ந்தனர்.

அப்போது கேதரின் ப்ருன்ட் மேலும் ஒரு ரன்கள் சேர்த்து 8 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த சோபி எக்லேஸ்டோன் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் 9-வது விக்கெட்டுக்கு சோபியா டங்க்ளி உடன் அனியா ஷ்ரப்சோல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. சோபியா அரைசதம் விளாச, அனியா அரைசதத்தை நோக்கி சென்றார். என்றாலும் 47 ரன்னில் வெளியேறினார். அப்போது இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்திருந்தது. அத்துடன் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இந்திய அணி தரப்பி் ஸ்னே ராணா 4 விக்கெட்டும், தீப்தி ஷர்மா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. ஸ்மிரி மந்தனா, ஷபாலி வர்மா ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினர். இருவரும் இங்கிலாந்து வீராங்கனைகளின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டனர். இருவரும் அரைசதம் விளாசினர். இதில் இளம் வீராங்கணையான ஷபாலி வெர்மா சதத்தை நோக்கி சென்றார். ஆனால் 96 ரன்கள் எடுத்த நிலையில் கிராஸ் பந்தில் ஆட்டமிழந்தார். ஸ்மிரிதி மந்தனா 78 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 167 ரன்கள் குவித்தது.

இதன் பின்பு அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது இந்திய அணி. இதனையடுத்து 2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களை எடுத்திருந்தது.