விளையாட்டு

இங்கிலாந்தில் அரைசதமடித்து சாதனைப் படைத்த ஷர்துல் தாக்குர்

இங்கிலாந்தில் அரைசதமடித்து சாதனைப் படைத்த ஷர்துல் தாக்குர்

jagadeesh

இங்கிலாந்து ஆடுகளங்கில் குறைந்த பந்துகளில் அரைசதமடித்து இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் இயான் போத்தம் சாதனையை முறியடித்திருக்கிறார் இந்தியாவின் இளம் ஆல் ரவுண்டர் ஷர்துல் தாக்குர்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் 191 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆனாலும் எட்டாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய ஷர்துல் தாக்கூர் 31 பந்துகளில் அரை சதம் விளாசினார். அதுவும் ராபின்சன் வீசிய அந்த பந்தில் தாக்கூர் சிக்சர் அடித்து அரை சதம் பதிவு செய்தார். இந்தப் போட்டியில் அரை சதம் அடித்ததன் மூலம் முக்கியமான சாதனையை முறியடித்திருக்கிறார் ஷர்துல் தாக்குர்.

அது இங்கிலாந்தில் குறைந்த பந்துகளில் அரை சதம் எடுத்த பெருமையை இதற்கு முன்பு இயான் போத்தம் வைத்திருந்தார். 1986- இல் நியூசிலாந்துக்கு எதிராக 32 பந்துகளில் அரை சதம் எடுத்தார். அந்தச் சாதனையை முறியடித்துள்ளார் ஷர்துல் தாக்குர். நூறு ஆண்டு வரலாறு கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் அரை சதம் எடுத்தவர் என்கிற பெருமையை ஷர்துல் தாக்குர் அடைந்துள்ளார்.

மேலும் இங்கிலாந்துக்கு எதிராக குறைந்த பந்துகளில் எடுக்கப்பட்ட அரை சதங்களில் ஷர்துல் தாக்குருக்கு 3-வது இடம். இந்திய வீரர்களில் கபில் தேவ் 1982- இல் 30 பந்துகளில் பாகிஸ்தானுக்கு எதிராக அரை சதம் எடுத்ததே இன்று வரை சாதனையாக உள்ளது. 31 பந்துகளில் அரை சதம் எடுத்த ஷர்துல் தாக்குருக்கு 2-வது இடம்.