விளையாட்டு

இங்கி.கேப்டனை தரக்குறைவாக பேசிய வெஸ்ட் இண்டீஸ் வீரருக்கு தடை!

இங்கி.கேப்டனை தரக்குறைவாக பேசிய வெஸ்ட் இண்டீஸ் வீரருக்கு தடை!

webteam

இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் ஜோ ரூட்டை அவமானப்படுத்தும் விதமாக பேசிய, வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளருக்கு 4 ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியது. கடைசி டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி வென்றது. 

கடைசி போட்டி நடந்து கொண்டிருந்தபோது, மூன்றாவது நாள் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட் செய்து கொண்டிருந்தார். அப்போது பந்து வீசிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் கேப்ரியல், அவரை கோபமாகத் திட்டினார். பதிலுக்கு ரூட்டும் ஏதோ சொன்னார். இது பரபரப்பானது. பின்னர் ஸ்டம்ப் மைக்கில் இருவரும் பேசிக்கொண்டது வெளியானது. 

அதில், கேப்ரியலிடம், ’’அவமானப்படுத்தும் விதமாக பேச வேண்டாம்’’ என்று ரூட் கூறுகிறார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, ‘’ஓரினச் சேர்க் கையாளராக இருப்பது தவறில்லை’’ என்கிறார் கேப்ரியல். இந்த வார்த்தை போர், மூன்றாவது நடுவர் ஜெப் கிரோவிடம் கொண்டு செல்லப் பட்டது. அவர் விசாரித்தார். விசாரணையில் தனது தவறை ஒப்புக்கொண்டார் கேப்ரியல். இதையடுத்து நான்கு ஒரு நாள் போட்டிகளில் விளை யாட அவருக்கு தடைவிதிக்கப்பட்டது. அதோடு போட்டிக் கட்டணத்தில் 75 சதவிகிதம் அபராதமாகவும் விதிக்கப்பட்டது. 

இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.