சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால், மரின் சிலிச் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். சீனாவில் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது இந்தப் போட்டித் தொடரின் முதல் நிலை வீரரான நடால், காலிறுதியில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் 6-4, 6-7, 6 -3 என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் குரோஷியாவின் மரின் சிலிச் உடன் நடால் பலப்பரீட்சை நடத்த இருக்கிறார். மரின் சிலிச் காலிறுதிப் போட்டியில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் ஆல்பெர்ட் ரமோஸை வென்றார்.