விளையாட்டு

இந்திய அணியை தோற்கடிப்பது பெரிய விஷயமல்ல - ஷகிப் அல் ஹசன்

இந்திய அணியை தோற்கடிப்பது பெரிய விஷயமல்ல - ஷகிப் அல் ஹசன்

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்தியாவை தோற்கடிப்பது பெரிய விஷயம் இல்லை என்று பங்களாதேஷ் அணியின் நட்சத்திர வீரரும் ஆல்ரவுண்டருமான ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணி ஓரளவுக்கு சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றி மூன்று தோல்வி என மொத்தம் 7 புள்ளிகளை பெற்று, பட்டியலில் 5 ஆம் இடத்தில் இருக்கிறது. அந்த அணியின் ஆல் ரவுண்டரான ஷகிப் அல் ஹசன் சிறப்பான ஆட்டத்தை இந்த தொடர் முழுவதும் வெளிப்படுத்தி வருகிறார்.

இதனையடுக்கு பங்களாதேஷ் அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் ஜூலை 2 ஆம் தேதி இந்தியாவை எதிர்கொள்ள இருக்கிறது. இது குறித்து பேட்டியளித்த ஷகிப் அல் ஹசன் இந்தியா முன்னணி அணியாகும். உலக கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக பலமாக இருக்கிறது. எனவே இந்திய அணிக்கு எதிரான ஆட்டம் எளிதாக இருக்காது. இந்தியாவுக்கு எதிராக நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என நம்புகிறேன். கடந்த காலங்களில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாகவே விளையாடி இருக்கிறோம்."

"அந்த அனுபவங்கள் எங்களுக்கு உதவியாக இருக்கும். நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்திய அணியை வெல்வது பெரிய விஷயமாக இருக்காது. இந்திய அணியில் உலக தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். அவர்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் படைத்தவர்கள். இருப்பினும் இந்திய அணியை வீழ்த்தும் திறமை எங்களுக்கு இருக்கிறது'  என்றார் ஷகிப் அல் ஹசன்.

இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடிய ஷகிப் அல் ஹசன் 476 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 2 சதம், மூன்று அரை சதம் அடித்துள்ளார். அதேபோல தனது பந்து வீச்சின் மூலம் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இதில் அதிகபட்சமாக இலங்கை அணிக்கு எதிராக 124 ரன்களை விளாசி பங்களாதேஷ் வெற்றிக்கு வித்திட்டார்.