விளையாட்டு

ஷாருக்கான் இறுதி நேர அதிரடி, ஜெகதீசன் அசத்தல் சதம்! - தமிழகம் முதல் வெற்றி

ஷாருக்கான் இறுதி நேர அதிரடி, ஜெகதீசன் அசத்தல் சதம்! - தமிழகம் முதல் வெற்றி

jagadeesh

விஜய் ஹசாரே கோப்பையின் முதல் லீக் போட்டியில் பஞ்சாபை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தமிழகம்.

விஜய் ஹசாரே கோப்பை 50 ஓவர் போட்டி தொடர் இன்று தொடங்கியது. இதில் இந்தூரில் நடைபெற்ற போட்டியில் தமிழகம் - பஞ்சாப் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதனையடுத்து பஞ்சாப் அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் குருகீரத் சிங் மன் 121 பந்துகளில் 139 ரன்கள் எடுத்தார். அடுத்து பிரப்சிம்ரன் சிங் 71 ரன்களும், சன்வீர் சிங் 58 ரன்களும் அடித்தார்கள்.

தமிழகம் தரப்பில் முகமது, சாய் கிஷோர், பாபா அப்ரஜித் தலா ஒரு விக்கெட்டை எடுத்தார்கள். இதனையடுத்து 289 என்ற வெற்றி இலக்கை நோக்கி தமிழகம் களமிறங்கியது. இதில் தொடக்க வீரர் அருண் கார்த்திக் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அதன் பின்பு ஜெகதீசனும், பாபா அப்ரஜித்தும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் ஜெகதீசன் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்பு பாபா அப்ரஜித்தும் 88 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்பு வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் 19 ரன்களில் வெளியேற வெற்றிக்காக போராடியது தமிழகம்.

ஆனால் இறுதியில் வந்த ஷாருக்கான் அதிரடியாக விளையாடினார் 36 பந்துகளில் 55 ரன்களை சேர்த்தார். அதில் 1 சிக்ஸரும் 7 பவுண்டரிகளும் அடங்கும். ஷாருக்கானின் விளாசலில் 49 ஆவது ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 289 ரன்கள் பெற்று வெற்றிப்பெற்றது தமிழகம். கடைசி வரை ஷாருக்கான் மற்றும் பாபா இந்திரஜித் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.