விளையாட்டு

கடைசி டி20: பாகிஸ்தானுக்கு ஆறுதல் வெற்றி!

கடைசி டி20: பாகிஸ்தானுக்கு ஆறுதல் வெற்றி!

webteam

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றி பெற்றது. 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வந்தது. இரு அணிகளுக்கு இடை யிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இப்போது நடந்து வந்தது. முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை, தென்னாப்பிரிக்க அணி ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இந்நிலையில் மூன்றாவது டி20 போட்டி நேற்று நடந்தது. 

(ஹென்ட்ரிக்ஸ்)

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 168 ரன் எடுத்தது.  தென்னாப்பிரிக்காவின் ஹென்ட்ரிக்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி யால், 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 141 ரன் மட்டுமே எடுக்க முடிந் தது. இதையடுத்து 21 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது, பாகிஸ்தான் அணி. தென்னாப்பிரிக்க அணியில் அதிகப் பட்சமாக, கிரிஸ் மோரிஸ் 29 பந்தில் 55 ரன்னும் வன் டர் டுசென் 35 பந்தில் 41 ரன் எடுத்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமிர் 3 விக்கெட்டும், சதாப் கான், பஹூம் அஸ்ரப் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருது, 8 பந்துகளில் 22 ரன் மற்றும் 2 விக்கெட் வீழ்த்திய சதாப் கானுக்கு வழங்கப்பட்டது.