அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். மரியா சக்கரிக்கு எதிரான பரபரப்பான ஆட்டதில் அவரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
வழக்கமாக டென்னிஸ் மைதானம் கூட்டத்தால் நிரம்பி இருக்க, ரசிகர்களின் ஆரவாரத்துக்கு இடையே பந்தை செலுத்துவார் செரீனா. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறைந்த அளவிலான ரசிகர்கள் மத்தியில் இந்த முறை செரீனா விளையாடினார். ஆனால் பார்வையாளர்கள் அரங்கில் இருந்து மிகப்பெரிய ஊக்கம் ஒன்று செரீனாவுக்கு கிடைத்தது. அது அவருடைய மகள் ஒலிம்பியா.
பார்வையாளர்கள் இருக்கையில் தன் தந்தையுடன் அமர்ந்திருந்த 3 வயதுடைய ஒலிம்பியா, செரீனாவை ஸ்கீரினில் பார்த்து மம்மா என க்யூட்டாக அழைத்தார். அப்போது ட்ரிங்க்ஸ் பிரேக்கில் இருந்த செரீனா தன் மகளை பார்த்து அன்பாக கை அசைத்தார். இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
பின்னர் பேசிய செரீனா, எனது மகள் வந்ததை நான் மறந்தே விட்டேன். அவளுடைய அம்மா போராடுவதை அவள் பார்த்திருப்பாள் என தெரிவித்துள்ளார்